விவேக் எக்ஸ்பிரஸ் : 4273 கி.மீ, 55 நகரங்கள், 3 நாள் - இந்தியாவின் நீண்ட ரயில் வழித்தடம்

இந்த ரயில், அசாம் மாநிலத்தின் திப்ருகர் (Dibrugarh) நகரத்தில் தொடங்கி தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி நகரத்தில் நிறைவடைகிறது.
Vivek Express
Vivek ExpressTwitter
Published on

2கே கிட்ஸ்கள் வேண்டுமானால் 250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஹயபூசா Z900 சூப்பர் பைக்குகளுக்கு ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் இப்போதும் ஜென் Z, ஜென் X கிட்ஸ்கள் ரயில் பயணங்களையே சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் பயணங்கள் நம்மை மெதுவாக, மனித நடமாட்டம் அதிகமில்லாத இடங்களை ரசிக்க வைக்கும். இயற்கையைப் பார்க்க, நமக்கு ஒரு புது பார்வையைக் கொடுக்கும். இலக்கை அடையக் காத்திருக்க வேண்டும் என்கிற வேதாந்தத்தை உரக்கச் சொல்லும். ஒரு நீண்ட ரயில் பயணம் நம் மனநிலையையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும்.

சில ரயில் பாதைகள் காணும் போதெல்லாம் ஆச்சரியத்தைக் கொடுக்க வல்லது. இந்தியாவில் அப்படி அதிசயிக்க வைக்கும் 7 ரயில் பாதைகளைப் பற்றி இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்.

Vivek Express
உங்களை பிரமிக்க வைக்கும் 7 இந்திய ரயில் பாதைகள் - நிச்சயம் போய் பாருங்க!

நாமே மெனக்கெட்டு ஒரு தொலைதூர ரயில் பயணத்தைத் தேர்வு செய்து பல ரயில்கள் மாறிச் செல்வதற்குப் பதிலாக, 168 ஆண்டுகள் பாரம்பரியமான, இந்தியா முழுக்க சுமார் 1.26 லட்சம் கிலோமீட்டருக்கு ரயில் இருப்புப் பாதைகளை நிர்வகிக்கும் இந்திய ரயில்வே அமைப்பே ஒரு நீண்ட ரயில் சேவையை நடத்தி வருகிறது. அந்த ரயிலின் பெயர் தி விவேக் எக்ஸ்பிரஸ்.

பாதை
பாதைTwitter

இந்த ரயில், அசாம் மாநிலத்தின் திப்ருகர் (Dibrugarh) நகரத்தில் தொடங்கி தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி நகரத்தில் நிறைவடைகிறது.

திப்ருகர் நகரத்தில் தொடங்கும் இந்த ரயில், கெளஹாத்தி, சிலிகுரி, துர்காபூர், அசன்சோல், கரக்பூர், கட்டக், புவனேஸ்வர், ஶ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், ராஜமண்ட்ரி, விஜயவாடா, ஓங்கோல், வேலூர், சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, ஆலுவா, எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் வழி நாகர்கோவிலை வந்தடைகிறது. இந்த ரயில் இந்தியாவின் 9 சிறிய மற்றும் பெரிய மாநிலங்கள் வழி பயணிக்கிறது.

Vivek Express
பர்மா - சயாம் மரண ரயில் பாதை : கொத்து கொத்தாக இறந்த தமிழர்கள் - ஒரு ரத்த சரித்திரம்

4,273 கிலோமீட்டர் பயணத்தை சுமார் 80 மணி நேரம் 15 நிமிடத்தில் கடக்கிறது தி விவேக் எக்ஸ்பிரஸ். வழியில் 55 நகரங்களில் நிறுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 3.5 நாள் பயணத்தில் ஒரு மனிதன் இந்தியாவின் பல மொழிகள், காலநிலைகள், உணவுகள் என ரசித்துப் புசித்து மகிழலாம். சுருக்கமாக வடகிழக்கு கோடி இந்தியாவின் ஒரு முனையிலிருந்து, தென் கோடி வரை ஒரே ரயிலில் சுகமாகப் பயணிக்கலாம்.

இந்த ரயில் கடந்த 2011ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் 2020 காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கொடூரமாகப் பரவத் தொடங்கிய போது நிறுத்தப்பட்டது.

Vivek Express
உலகின் பழமையான 8 ரயில் நிலையங்கள் இவைதான்!

உலகின் நீண்ட ரயில் வழித்தடம், ரஷ்யாவில் உள்ளது. மாஸ்கோ நகரத்திலிருந்து, விலாடிவோஸ்டோக் (Vladivostok) நகரத்தைச் சென்றடை 9,250 கிலோமீட்டர் பயணத்துக்கு சுமார் 6 நாட்கள் ஆகும். இந்தியாவின் நீண்ட ரயில் வழித் தடத்தை விட இரு மடங்கு அதிக தூரமிது.

இந்த மழைக் காலத்தில் ஒரு நீண்ட சுற்றுலா செல்ல விரும்புவோர், விவேக் எக்ஸ்பிரஸில் ஒரு முறை பயணித்துப் பாருங்களேன்.

Vivek Express
இந்தியா : அனுபவித்து ரசிக்கக்கூடிய 5 அழகான ரயில் பயணங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com