Domestic Violence
Domestic ViolencePixabay

வெளிநாட்டு கணவர், சித்ரவதை சந்திக்கும் பெண் - குடும்ப வன்முறையை கையாளுவதற்கான வழி என்ன?

"நான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டேன், ஒருநாள் எல்லாம் சரியாகும் என்று கருதினேன்... கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, இனியும் என்னால் தினமும் அடிவாங்க முடியாது" எனக் காணொளி ஒன்றில் பேசி இருந்தார் மந்தீப் கெளர்.
Published on

இந்தியப் பெண் மந்தீர் கெளர் என்பவர் சமீபத்தில் நியூயார்க் நகரத்தில் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பேசிய காணொளி இன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

"நான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டேன், ஒருநாள் எல்லாம் சரியாகும் என்று கருதினேன்... கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, இனியும் என்னால் தினமும் அடிவாங்க முடியாது" எனக் காணொளி ஒன்றில் பேசி இருந்தார் மந்தீப் கெளர்.

பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றதால் தன் கணவர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும், தன் கணவரின் உறவினர்கள் தன்னை தற்கொலை செய்து கொண்டு சாகச் சொன்னதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் மந்தீப் கெளர். நியூ யார்க் நகரத்தில் இருக்கும் இந்தியத் தூதரக அலுவலகம், மந்தீப் கெளரின் குடும்பத்தினருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாகக் கூறியுள்ளது.

இந்தியாவிலிருந்து, என் ஆர் ஐ அல்லது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களைத் திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் கொடுமைப்படுத்தப்படுவது, அவர்களின் வாழ்க்கை குறித்து... பொது வெளியில் விவாதங்கள் தொடங்கியுள்ளன. எதார்த்தத்தில் இந்தியப் பெண்கள் பாதுகாக்கப்பட ஏதேனும் வழி இருக்கிறதா..?

உதவி கோருவது எப்படி?


இந்தியப் பெண்கள் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி (How to address issues related to Marriages of Indian Women to Non-resident Indian and person of Indian Origin (NRI/PIOs)) என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் தனியாக ஓர் ஆவணமே இருப்பதாக இந்தியா டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில் பெண்கள் எப்படி பிரச்சனைகளைச் சமாளிக்கலாம் என விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே வெளிநாடு வாழ் மாப்பிள்ளையைக் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய வம்வாசளியினர் நடத்தும் சங்கங்கள், அரசு சாரா அமைப்புகளின் மூலம் மாப்பிள்ளை குறித்து விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.

திருமணமாகி கணவன் வீட்டில் வாழத் தொடங்கிய பின், வரதட்சணை கொடுமை, மோசமாக நடத்தப்படுவது, துன்புறுத்தப்படுவது போன்ற பிரச்சனைகளை வெளிநாட்டில் எதிர்கொண்டால், அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். மேலும் உள்நாட்டுக் காவல்துறையிடமும் புகாரளிக்கலாம்.

ஒருவேளை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு மாப்பிள்ளை, பெண்ணை மீண்டும் இந்தியாவிலேயே விட்டுச் சென்றுவிட்டால் இந்தியக் காவல் துறையிடம் புகார் கொடுத்து 498A பிரிவின் கீழ் வழக்கு தொடரலாம் என்கிறது இந்தியா டைம்ஸ்.d

குடும்ப வன்முறை
குடும்ப வன்முறைCanva

ஒருவேளை கணவன், வெளிநாட்டில் வைத்து இந்தியப் பெண்ணை கைவிட்டால் கூட, சி ஆர் பி சி 188 சட்டப் பிரிவின் படி இந்தியாவிலேயே வழக்குத் தொடுக்கலாம். எனவே அப்படி ஒரு சூழலை இந்தியப் பெண்கள் வெளிநாட்டில் எதிர்கொண்டால் கூட இந்தியாவில் வழக்குத் தொடுத்து மாப்பிள்ளைக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கலாம்.

வெளிநாட்டில் கைவிடப்படும் இந்தியப் பெண்களுக்கென Ministry of Overseas Indian Affairs for Indian women deserted by their overseas Indian/foreigner husbands என்கிற பெயரில் ஒரு திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி, அந்நாட்டில் இருக்கும் அரசு சாரா அமைப்புகள், சட்ட நிறுவனங்களோடு இணைந்து இந்தியத் தூதரகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சட்ட ரீதியிலும், நிதி ரீதியிலும் பல உதவிகளைச் செய்து வருகிறது. இத்திட்டத்தின் படி வளர்ந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 3,000 அமெரிக்க டாலர் மற்றும் வளரும் நாடுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2,000 அமெரிக்க டாலர் அளவுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது.

Domestic Violence
நாக சைதன்யா குறித்த கேள்விக்கு சமந்தா பதில் : ”கூர்மையான பொருட்களை மறைத்து வைக்கணும் ”

ஒருவர் குற்றம் செய்திருப்பதாகக் கூறி இந்தியாவில் உள்ள விசாரணை முகமைகள் கேட்டுக் கொண்டால் தான், மற்ற நாடு, குற்றம் செய்திருப்பதாகக் கூறும் நபரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஒப்புக் கொள்ளும். அதற்கு இந்தியாவோடு எந்தெந்த நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பதையும் இங்குக் கவனிக்க வேண்டும். தேசிய மகளிர் ஆணையத்திடம் பெண்கள் குடும்பத்தினர் கொடுமை செய்வது தொடர்பாகவும் உதவி கோரலாம்.

குடும்ப வன்முறை
குடும்ப வன்முறைCanva

கவனம் தேவை

ஒரு பெண், ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டால், அத்திருமணம் நடந்து 48 மணி நேரத்துக்குள் இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். இச்சட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இப்படி திருமணத்தைப் பதிவு செய்வதால், பெண்களை வெளிநாடு வாழ் இந்தியக் கணவன்மார்கள் ஏமாற்றினால் அவர்களின் பாஸ்போர்ட், விசா வரை முடக்கப்படலாம் என முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி ஒருமுறை கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.

Domestic Violence
விவாகரத்து குறித்து டிக்டாக்கில் பேசிய இளம்பெண்ணை கொலை செய்த கணவர்

அப்படி 48 மணி நேரத்துக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை எனில் பாஸ்போர்ட் விசா வழங்கப்படாது என்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ளவும்.

இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து One-Stop Centres (OSC) என்கிற பெயரில் ஒரு திட்டத்தை நடத்தி வருகின்றன. இதன் மூலம் வெளிநாட்டில் வாழும் இந்தியப் பெண்களுக்குக் காவல் துறை உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி உட்படப் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பல உதவிகளைச் செய்து வருகிறது.

இப்போதும் இந்தியப் பெண்கள் வெளிநாட்டில் குடும்ப வன்முறைக்கு ஆளாகி வருகிறார்கள் என்றால் தேசிய பெண்கள் ஆணையத்தின் என் ஆர் ஐ பிரிவிடம் உதவி கேட்கலாம். 91-11-23234918 என்கிற எண்ணுக்கு அழைத்துப் பேசலாம் அல்லது nricell-ncw@nic.in என்கிற மின்னஞ்சலுக்குப் புகாராக எழுதி அனுப்பலாம்.

Domestic Violence
மனைவியை நேரலையில் கொலை செய்த நபர்: மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம் - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com