சீனாவில் நேரலையில் இருந்த மனைவியை எரித்துக்கொலை செய்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
டாங்க் லூ மற்றும் அவரது முன்னாள் மனைவி லாமு இருவரும் டோயின் எனும் சீன சமூக வலைத்தளத்தில் (டிக் டாக் போன்றது) இன்ஃப்ளூயன்சராக இருந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் குடும்ப உறவு சுமுகமாக இல்லாத நிலையில், 2020ல் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். ஆனால் இந்த விவாகரத்துக்கு லூவிற்கு விருப்பம் இல்லை என நீதிமன்ற குறிப்புகள் கூறுகின்றன. லூ தொடர்ந்து தன் திருமண வாழ்வைச் சரி செய்ய விளைந்திருக்கிறார்.
திபெத்தியரான லாமு தனது வாழ்வை டோயினில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். Lahmo என்பது தான் அவரது சோசியல் மீடியா பெயர். அவருக்கு 75,000 -க்கும் மேலான ஃபாலோயர்கள் இருந்திருக்கின்றனர். திபெத்திய கலாச்சார உடைகளை அணிந்து வீடியோக்களைப் பதிவிடுவது அவரது ஸ்டைல்.
2020 செப்டம்பரில் ஒரு நாள் டோயினில் நேரலை செய்த போது, விரக்தியிலிருந்த அவரது முன்னாள் கணவரான லூ லாமுவின் வீட்டுக்கு பெட்ரோலுடன் சென்றிருக்கிறார். பெட்ரோலை ஊற்றி அவரை எரித்திருக்கிறார் லூ. சில வாரங்கள் சிகிச்சையிலிருந்த லாமு இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் சீன பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது.
LahmoAct என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளத்தில் மக்கள் பகிர்ந்தனர். குடும்ப வன்முறை மற்றும் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக விவாகரத்து பெரும் உரிமை ஆகியவற்றை பற்றி நாடுமுழுவதும் பேசப்பட்டது.
விவாகரத்துக்கு முன்பாகவே லாமு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக அவரது தங்கை செய்தி நிறுவனங்களில் கூறியிருக்கிறார்.
லாமுவை கொடூரமாக எரித்துக் கொலை செய்த லூவுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது,
அதன் படி அக்டோபர் 2021ல் விதிக்கப்பட்ட மரண தண்டனை கடந்த சனிக் கிழமை நிறைவேற்றப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust