(Rep)
(Rep)Canva

ஒரு நாளில் 30 நிமிடங்கள் மீம்ஸ் பார்க்கும் இந்தியர்கள் - ஆய்வில் வெளியான தகவல்

குறுகிய காலத்தில் எதிர்பாராத அளவு பிரபலம் அடைய வைக்கும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், எந்தவொரு தனிநபரும் ஒரு மீமுடனும், அவர்களை இணைத்துக்கொள்ள முடியும்..
Published on

சமூக ஊடகங்கள் நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது சமூக ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்தை கடந்து பொழுதுபோக்கு அம்சமாக நகர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர்கள் மீம்கள் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அந்த மீம்கள் பார்க்க நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை என்றாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா?

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மீம்ஸ் பார்க்க செலவிடுகின்றனர் என் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 80 சதவீதம் பேர் மீம் பார்க்கும் வழக்கத்தை அதிகரித்துள்ளதாக ரெட்சீரின் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்படிருக்கிறது.

Meme
Memecanva

பெரும்பாலான பயனர்கள் மீம்ஸை மன அழுத்தத்தை வெளியிட சிறந்த வழியாக பார்க்கிறார்கள்.அதில் 50 சதவீதம் பேர் தங்கள் நினைவு நுகர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் என ரெட்சீரின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது பலரது பொழுது போக்குகளில் ஒன்றாக மீம் உச்சத்தில் உள்ளது. 80 சதவீதம் பேர், மீம் பார்க்கும் பழக்கத்தை அதிகரித்திருப்பதில் ஆச்சரியமில்லை என்று ரெட்சீரின் பங்குதாரரான மிரிகாங்க் குட்குடியா கூறினார்.

(Rep)
மீம் போட்ட நேரத்துக்கு நாலு காசு சேர்த்து இருக்கலாம்: வைரலாகும் ஆனந்த் சீனிவாசன் மீம்ஸ்
(Rep)
உலகின் முதல் மீம் எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com