உலகின் முதல் மீம் எது தெரியுமா?

ட்விட்டரில் உலகின் முதல் மீமாக கருதப்பட்ட மீம் 1921ம் ஆண்டைச் சேர்ந்தது. ஒரு படம் (Picture) அதற்கான தலைப்பு (text - caption) எனும் அமைப்பில் நகைச்சுவையும் வெளிப்பட்டு மிகச் சரியான மீம் வடிவத்தைக் கொண்டிருக்கிறது இந்த காமிக்.
மீம்
மீம்Twitter
Published on

இந்த டிஜிட்டல் உலகில் நமக்கிருக்கும் மிகப் பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றால் அது மீம்கள் தான். அரசியல், சினிமா, வாழ்வியல் அத்தனையும் நாம் மீம்கள் வழியாகவே புரிந்துகொள்கிறோம்.

எந்த செலவும் இல்லாமல் எளிதாக நம்மை ரசிக்க வைத்து சிரிக்க வைக்கும் மீம்கள் எப்போது உருவானது தெரியுமா? உலகின் முதல் மீமை கண்டறிந்துள்ளனர்.

ட்விட்டரில் உலகின் முதல் மீமாக கருதப்பட்ட இது 1921ம் ஆண்டைச் சேர்ந்தது. ஒரு படம் (Picture) அதற்கான தலைப்பு (text - caption) எனும் அமைப்பில் நகைச்சுவையும் வெளிப்பட்டு மிகச் சரியான மீம் வடிவத்தைக் கொண்டிருக்கிறது இந்த காமிக்.

இதில் இரண்டு புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவை Expectation vs Reality என்று தற்போது ட்ரெண்டில் இருக்கும் வடிவத்திலேயே அமைந்திருக்கின்றன.

இந்த மீமை டெம்ப்ளேட்டாகக் கொண்டு தற்போதும் மீம்கள் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. காலத்தால் அழியாதது திருக்குறள் மட்டுமல்ல மீம்களும் தான் என்பதை எடுத்துக்கூறும் இந்த புகைப்படம் மீம் கிரியேட்டர்களுக்கு பெறுமையான ஒன்று தானே!

1921ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியாகிக்கொண்டிருந்த நையாண்டி பத்திரிக்கையான ஜட்ஜ் பத்திரிக்கையில் இது வெளியாகியிருந்தது.

மீம்
TTF Vasan : 2K கிட்ஸ்களின் நாயகன் ஆனது எப்படி? இவர் பின்னணி என்ன? - விரிவான தகவல்

ஆனால் ஜட்ஜ் பத்திக்கையில், the Wisconsin Octopus என்ற பத்திரிக்கைக்கு இந்த காமிக்குக்கான கிரெடிட் கொடுக்கப்பட்டிருந்தது.

பிபிசி பத்திரிக்கையில் வெளியிட்ட செய்திகளின் படி, இந்த மீம் வெளியாவதற்கு முன்னதாகவே 1919 - 1920வாக்கில் ஒரு Expectation vs Reality பானியிலான கார்டூன் வெளியாகியிருக்கிறது.

முதல் மீம்
முதல் மீம்Twitter
மீம்
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

MEME

மீம் என்பது 1976ம் ஆண்டு Richard Dawkins என்பவர் மீம் என்பதைக் கண்டறிந்தார். இதனை ஒரு மூளையிலிருந்து மற்றொரு மூளைக்கு பகிரப்படும் ஐடியா என வரையறுத்திருந்தார்.

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் வரையறைப்படி இவற்றை முதல் மீம் எனக் கூறலாம். இது போல பல புகைப்படங்கள் நாளிதழ்களில் வரையப்பட்டாலும் நகைச்சுவை உணர்வு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பது இந்த புகைப்படங்களே.

ஆக்ஸ்ஃபோர்ட் டிக்‌ஷனரி மீம் என்பதை இணைய பயனர்களால் பரப்பப்படும் புகைப்படம், வீடியோ அல்லது எழுத்துக்கள் என வகைப்படுத்துகிறது.

இதனால், இந்த முதல் மீமை இ.மு முதல் மீம் எனக் கூறலாம். (இ.மு - இணையத்துக்கு முந்தைய)

மீம்
மீம் டெம்ப்ளேட்டாக மாறிய நாடாளுமன்றம் - சசி தரூர் விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com