மே மாதம் வந்துவிட்டாலே குழந்தைகளின் கோடை விடுமுறை, வீடுகளில் கொண்டாட்டத்தைக் கொண்டு வந்துவிடும். வெவ்வேறு ஊர்களில் இருக்கும் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வது ஒருவிதமான மகிழ்ச்சியான அனுபவம் என்றாலும், இதுவரை பார்த்திராத புதிய இடங்களுக்கு, குறிப்பாகக் கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமை நிறைந்த மலை வாசஸ்தலங்களுக்கோ, கடற்கரைப் பகுதிகளுக்கோ சென்று வருவது என்பது கூடுதல் குதூகலத்தைத் தரக்கூடியது.
சரி... அப்படியான இடங்களுக்குச் சென்று வர ஆசைதான்... ஆனால், அதற்கான பட்ஜெட் அதிகமாகுமே என யோசிக்கிறீர்களா..? அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம்...
வெறும் 10,000 ரூபாய் செலவில், ஒரு மறக்க முடியாத மே மாத ஜாலி டூர் அனுபவத்தைப் பெறுவதற்கான இந்தியாவில் உள்ள 7 டூரிஸ்ட் ஸ்பாட்டுகளின் பட்டியல் இதோ...
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு அழகான, மக்கள் கூட்டம் அதிகம் காணப்படாத மலைவாசஸ்தலம் தவாங். அஸ்ஸாமில் உள்ள தேஸ்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு பேருந்தில் மாறி மாறி பயணம் செய்தால் தவாங் சென்றடைந்து விடலாம். ஒரு பேருந்துக்கு ரூ. 200 வீதம் வெறும் 400 ரூபாய் மட்டுமே செலவாகும். இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த அழகான மலைவாசஸ்தலம் பகுதிக்குச் செல்ல, அதிகபட்சம் 4 நாள் பயணத்திற்கு ரூ. 3,000 வரைதான் செலவாகும். இங்குச் செல்ல, நீங்கள் கவுஹாத்திக்கு விமானத்தில் சென்றாலும், பெரிய செலவாகி விடப்போவதில்லை.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பஹேஸ்வர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலைவாசஸ்தலம், வாழ்க்கையில் ஒரு முறையேனும் கட்டாயம் சென்று ரசித்து அனுபவித்து வர வேண்டிய இடம். பயணச் செலவெல்லாம் அதிகமாகாது. அதிலும் டெல்லியிலிருந்து செல்வதானால், தாராளமாகப் பேரம் பேசி, குறைந்த கட்டணத்தில் சென்று வர முடியும்.
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள சில இடங்கள், காசணியின் நிலப்பரப்புடன் ஒப்பிடப்படுகின்றன. ஏதாவது டிராவல் ஏஜென்சி மூலமாக டூர் பேக்கேஜில் செல்வதற்குப் பதிலாக, காசணியில் பார்க்க வேண்டிய அனைத்து சிறந்த இடங்களையும் கூகுள் செய்து விட்டு அதற்கேற்றவாறு, உங்கள் பிளானை நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம். இங்கு ஒரு நாளை கழிக்க அதிகபட்சம் 1500 ரூபாய்தான் ஆகும். மலைகளில் அமைந்துள்ள இந்த அழகான உத்தரகாண்ட் தோட்டத்தில், ஒரு மேஜிக்கல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையே கொண்டாடி விட்டு வரலாம்.
காஷ்மீரில் லே தாலுகாவின் குறுக்கே அமைந்துள்ள அழகான இடங்களில் ஒன்று ஹெமிஸ். அதிகம் மக்கள் கூடாத பகுதி இது. அமைதியாக ரசித்து விட்டு வரலாம். மணாலியில் இருந்து லே வரை டிரக் சவாரிக்கு ரூ. 500 வரை ஆகும். இந்த நகரம் அழகும் எளிமையுமாக ஒருபுறம் திகழ்கிறது என்றால், உணவு மற்றும் தங்குமிடத்திற்காக ஆகும் மிகக்குறைந்த அளவிலான செலவு, உங்களை மேலும் குஷியாக்கி விடும். பிறகாலத்தில் நினைத்து நினைத்து மகிழத்தக்க ஒரு கனவு சுற்றுலாவை, உங்கள் வாழ்க்கையில் மிஸ் செய்து விடாதீர்கள்.
வெறும் 5,000 ரூபாய் பட்ஜெட்டில், குலுவில் 4 நாட்கள் தங்கி, அங்குள்ள இடங்களை ரசித்துவிட்டு வரலாம் என நிச்சயமாக அடித்துச் சொல்லலாம். டெல்லியில் இருந்து குலுவிற்குச் செல்லும் பேருந்து பயணத்துக்கும் அதிகம் செலவாகாது. அதுமட்டுமல்ல, குலுவில் இருந்து ரஷோல் மற்றும் கசோல் போன்ற இடங்களுக்கும் அதிகம் செலவில்லாமால் நீங்கள் சென்று வர முடியும். கொரோனா அச்சுறுத்தலெல்லாம் ஓரளவு ஓய்ந்துவிட்ட இந்தத் தருணத்தில், குலு மணாலி உங்களை வரவேற்க காத்திருக்கிறது.
சோஷியல் மீடியாவில் அண்மை நாட்களாக ஒரு மீம்ஸ் சுற்றிக்கொண்டிருக்கிறது. நெருக்கமான நண்பர்கள் 2 பேர், " எப்படியாவது கோவாவுக்கு ஒரு ட்ரிப் போய்ட்டு வரணும்ண்டா மச்சி..." எனக் கல்லூரி காலத்தில் சொல்லியதை, திருமணமாகி குடும்பஸ்தனாக ஆன பின்னரும், அதே டயலாக்கைச் சொல்லிக் கொண்டிருப்பதாக அந்த மீம்ஸ் கலாய்க்கிறது.
அந்த மாதிரி உங்களை யாரும் கலாய்த்து விடாமல் இருப்பதற்காகவேனும் நீங்கள் கோவாவுக்கு ஒரு ட்ரிப் அடித்து விடுங்கள். அதிலும் நண்பர்களுடன் சென்றால், கொண்டாட்டத்துக்குக் கோவா 100 சதவீதம் உத்தரவாதம் தரும்.
இந்தியாவின் முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்டான கோவாவுக்குச் சென்று வருவது, நிச்சயம் உங்கள் வாழ்க்கை டைரியின் சில பக்கங்களை மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்க்க வைக்கும். இங்குச் செல்ல, செலவும் அதிகமாகி விடாது. 800 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்திலேயே கோவாவுக்குப் பேருந்தில் சென்று, தெற்கு கோவாவில் இறங்கி, ஒவ்வொரு இடமாகச் சென்று ரசிக்கலாம். கோவாவில் ஒரு நாளை கழிக்க 100 ரூபாய் போதுமானது. கோவாவில் உள்ள கலர்ஃபுல்லான ஹாஸ்டல் இன்-ஹவுஸ் பார், தொங்கும் படுக்கைகள் வெறும் 399 முதல் கிடைக்கின்றன.
பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த ஜெய்சால்மர், ராஜஸ்தானின் தார் பாலைவனத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்களில் ஒன்றாகத் திகழும் இந்த இடத்திற்குச் சென்றால், ராஜஸ்தானுக்கே உண்டான பிரத்யேக அனுபவத்தை நாம் ரசித்து அனுபவிக்கலாம்.
இங்கு ருசியான உணவு மற்றும் தங்குமிடங்கள் உட்பட 3 நாள் பயணத்திற்கான உங்கள் செலவு, அதிகபட்சம் ரூ. 5500-க்குள்தான் இருக்கும். நீங்கள் ஜெய்சல்மருக்கு ரயிலில் சென்று, அங்குள்ள குன்றுகளில் உங்கள் பாதங்களைத் தடம் பதித்துவிட்டு வரலாம்.
கடவுள் பூமி என வர்ணிக்கப்படும் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம்தான் வர்கலா. இந்தியாவின் மிக அழகிய கடற்கரை இடங்களில் ஒன்றாகும். பிரபலமான சுற்றுலாத் தலமாக இருந்தாலும், வர்கலாவிற்கு திருவனந்தபுரத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் வ்ரயிலிலேயே செல்லலாம். வெறும் 50 ரூபாய்தான் ஆகும். கூடவே, வர்கலாவில் சிக்கனமான பட்ஜெட்டில் அதிகமான தங்குமிட வசதிகளும் உள்ளன.
படிச்சி முடிச்சீட்டீங்களா..? அப்புறமென்ன... டூர் பிளானைப் போடுங்கள்... உங்கள் வாழ்க்கையின் ஒரு மறக்க முடியாத டைரி குறிப்பை உங்கள் மனதில் எழுதுங்கள்..!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu