11 இந்திய மாநிலங்களைக் கடந்து செல்லும் NH44 நெடுஞ்சாலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

NH44 நெடுஞ்சாலை, மொத்தம் 11 இந்திய மாநிலங்களைக் கடந்து செல்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் வடக்கு முனையில் உள்ள ஸ்ரீநகரை இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு இணைக்கிறது.
11 இந்திய மாநிலங்களைக் கடந்து செல்லும் NH44 நெடுஞ்சாலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
11 இந்திய மாநிலங்களைக் கடந்து செல்லும் NH44 நெடுஞ்சாலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!canva

NH44 நெடுஞ்சாலை, NH 7 என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை என்று கருதப்படும் இது 3,745 கிலோமீட்டர்கள் (2,327 மைல்கள்) வரை நீண்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் வடக்கு முனையில் உள்ள ஸ்ரீநகரை இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு இணைக்கிறது.

பல மாநில நெடுஞ்சாலை

NH44 நெடுஞ்சாலை, மொத்தம் 11 இந்திய மாநிலங்களைக் கடந்து செல்கிறது. அதாவது இந்த நெடுஞ்சாலை ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக செல்கிறது.

வரலாறு வழியாக பயணம்

NH44 ஆக்ரா, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களை கடந்து செல்கிறது. NH44 என பெயரிடப்படுவதற்கு முன்பு, இந்த நெடுஞ்சாலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டது. அதன் முந்தைய பெயர்கள் NH 1A, NH 1, NH 2, NH 3, NH 75, NH 26 மற்றும் NH 7 ஆகியவை ஆகும்.

பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதாரத்தில் NH44 முக்கிய பங்கு வகிக்கிறது. இது நாடு முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகளை கொண்டு செல்வதற்கும், விவசாய மையங்கள், தொழில்துறை மையங்கள் மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் முக்கிய அம்சமாக செயல்படுகிறது.

11 இந்திய மாநிலங்களைக் கடந்து செல்லும் NH44 நெடுஞ்சாலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
கடலுக்கு அடியில் 7,000 ஆண்டுகளுக்கும் பழமையான சாலை கண்டுபிடிப்பு - எங்கே?

ஒன்றிணைத்தல்

NH44 நெடுஞ்சாலை ஒற்றை அல்லது தொடர்ச்சியான நெடுஞ்சாலையாக கட்டப்படவில்லை. இது ஏற்கனவே இருந்த ஏழு தேசிய நெடுஞ்சாலைகளின் கலவை. இதனை ஒருங்கிணைத்து, போக்குவரத்தை நெறிப்படுத்தி, ஒரு முக்கிய வடக்கு-தெற்கு இணைப்பு உருவாக்கப்பட்டது.

உலக தரவரிசை

NH44 இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலையாக இருப்பதால், உலக அரங்கிலும் இடத்தைப் பிடித்துள்ளது. உலகளவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலைகளில் இது 22வது இடத்தில் உள்ளது.

11 இந்திய மாநிலங்களைக் கடந்து செல்லும் NH44 நெடுஞ்சாலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
தனுஷ்கோடி: இந்தியாவின் கடைசி சாலை எங்கு இருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsa

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com