கடலுக்கு அடியில் 7,000 ஆண்டுகளுக்கும் பழமையான சாலை கண்டுபிடிப்பு - எங்கே?

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சாலை பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுமார் 4 மீட்டர் (13 அடி) அகலம் கொண்ட சாலை, கடலோரத்தில் மண் அடுக்குகளுக்கு அடியில் புதைந்து காணப்பட்டது.
7,000-Year-Old Submerged Road Discovered Under The Mediterranean Sea
7,000-Year-Old Submerged Road Discovered Under The Mediterranean SeaTwitter

மத்தியத்தரை கடல் பகுதியில் 7000 ஆண்டுகளுக்கும் பழமையான சாலை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜாதார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோர்குலா தீவின் தரையோர பகுதியில் கற்களால் ஆன சாலையை கண்டுபிடித்தனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் கோர்குலாவைச் சுற்றியுள்ள நீரின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததன் மூலம் சாலையின் எச்சங்களை அடையாளம் கண்டனர்.

கடற்பரப்பில் ஒரு அசாதாரண அம்சத்தை கவனித்த பிறகு, ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கடியில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

ஆய்வு செய்யும் போது, அவர்கள் கற்களால் ஆன சாலையை கண்டுபிடித்தனர்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சாலை பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுமார் 4 மீட்டர் (13 அடி) அகலம் கொண்ட சாலை, கடலோரத்தில் மண் அடுக்குகளுக்கு அடியில் புதைந்து காணப்பட்டது.

7,000-Year-Old Submerged Road Discovered Under The Mediterranean Sea
Gujarat: கடலுக்குள் மூழ்கிய நகரம்; கிருஷ்ணர் உருவாக்கிய 'துவாரகா' - சுவாரஸ்ய தகவல்கள்

ஜாதார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையின்படி, பழங்கால சாலை ஒரு காலத்தில் சோலைனை கோர்சுலாவுடன் இணைத்தது என்றும் 7,000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நீருக்கடியில் உள்ள இடிபாடுகளின் ஆரம்ப அகழ்வாராய்ச்சியில் ஏராளமான கற்கால கலைப்பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் பிளின்ட் பிளேடுகள், கல் அச்சுகள் மற்றும் மைல்ஸ்டோன்களின் துண்டுகள் ஆகியவை அடங்கும்.

7,000-Year-Old Submerged Road Discovered Under The Mediterranean Sea
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - எங்கு தொடங்குகிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com