இந்தியாவின் Hidden Spots : நடுகாட்டில் இருக்கும் வீடுகள் த்ரில்லர் அனுபவத்தை தருமா?

இயற்கையுடன் ஒன்றுவதற்கு, நகரமயமான பிசியான வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் ரிலீஃப் பெற்று, மனிதர்களற்ற உலகில் ஓரிரு நாட்கள் வாழ காடுகள் வழிவகுக்கின்றன.
இந்தியாவில் இருக்கும் காட்டு விடுதிகள் பற்றி தெரியுமா?
இந்தியாவில் இருக்கும் காட்டு விடுதிகள் பற்றி தெரியுமா?Canva
Published on

சுற்றுலா செல்வதைக் காட்டிலும், காடுகளுக்குள் டிரெக்கிங் செல்வது, வனவிலங்குகளை பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவத்தை கொடுக்கும். முக்கியமாக இரவைக் கழிப்பது.

இயற்கையுடன் ஒன்றுவதற்கு, நகரமயமான பிசியான வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் ரிலீஃப் பெற்று, மனிதர்களற்ற உலகில் ஓரிரு நாட்கள் வாழ காடுகள் வழிவகுக்கின்றன.

முன்பு போல காடுகளுக்குள் நிச்சயம் கூடாரம் அமைத்து தான் நாம் நம் இரவுகளை அங்கு கழிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அங்கு தங்க ஃபாரஸ்ட் ரெஸ்ட் ஹவுஸ்கள் வந்துவிட்டன.

இந்தியாவிலும் இது போன்ற சில வன ஓய்வு விடுதிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்

திகாலா ஃபார்ஸ்ட் லாட்ஜ், உத்தர்காண்ட்

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த விடுதியானது, இந்தியாவின் காடுகளில் தங்கி வனவிலங்குகளை பார்த்து ரசிப்பதில் நமக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.

இங்கு ஜீப் மற்றும் யானை சபாரி செய்யலாம். மேலும் இங்கு பன்றி மான், சிட்டால் வகை மான், ராப்டர் வகை பறவை ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்

இந்தியாவில் இருக்கும் காட்டு விடுதிகள் பற்றி தெரியுமா?
இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் - சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!

சாங்கரா வன ஓய்வு விடுதி, இமாச்சல பிரதேசம்

சைஞ்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த விடுதி. இயற்கை காதலர்களுக்கு இது சிறந்த தங்குமிடமாகும். இங்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய இரண்டு டீலக்ஸ் அறைகளும் உள்ளன. இங்கு பனி சிறுத்தை, இமாலயன் டார் போன்ற விலங்குகளை காணலாம்

கே குடி வன முகாம், கர்நாடகா

கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் அமைந்துள்ளது இந்த காட்டு விடுதி. மலை மேல் அமைந்துள்ள இந்த இடத்தில், சுமார் 250 வகையான பறவை இனங்களை காணலாம். தவிர குரைக்கும் மான், புள்ளி மான், ஸ்லாத் பியர், காட்டு நாய் போன்றவற்றை காணலாம்

இந்தியாவில் இருக்கும் காட்டு விடுதிகள் பற்றி தெரியுமா?
'இரவில் ஒளிரும் காடு' - மேற்கு தொடர்ச்சி மலையின் அதிசயக் காடு - அறிவியல் சொல்வது என்ன?

ஜங்கல் ரெசார்ட் குனோ, மத்திய பிரதேசம்

குனோ நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ரெசார்ட்டில், நல்ல வசதிகளுடன் கூடிய சூட் அறைகள் உள்ளன. இந்த குனோ நதியை பார்த்து ரசிக்கும் விதத்தில், இங்கு ரிவர் வியூ அறைகளும் கிடைக்கும்.

இங்கு இந்திய சிறுத்தை, தென் கிழக்கு ஆப்பிரிக்க சிறுத்தை, காட்டுப்பூனை, ஸ்லாத் கரடி, ஓநாய், குள்ளநரி உள்ளிட்ட வனவிலங்குகளை காணும் வாய்ப்பு கிடைக்கும்

மாதங்குரி காட்டு விடுதி, அசாம்

மனஸ் தேசிய பூங்காவில் அமைந்துள்ள இந்த விடுதியானது அரசாங்கத்தால் பராமரிக்க்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பூட்டான் மலைகளை காணலாம்.

இங்கு புலிகள், யானை, நீர்யானை போன்றவை அல்லாமல், அசாம் ரூஃப்ட் ஆமை, ஹிஸ்பிட் ஹரே, கோல்டன் லங்கூர், காட்டு நீர் எருமை மற்றும் பிக்மி ஹாக் போன்ற அரிதான விலங்குகளை காணலாம்

இந்தியாவில் இருக்கும் காட்டு விடுதிகள் பற்றி தெரியுமா?
டல்ஹவுசி: இந்தியாவின் இந்த underrated டூரிஸ்ட் ஸ்பாட் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com