ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் 175 பயணிகள் பயணித்தனர். அந்த விமானத்தின் கழிவறையில் ஒரு மிரட்டல் கடிதம் ஒன்று வைக்கப்பட்டு இருந்துள்ளது.
அந்த மிரட்டல் கடிதம் கழிவறையில் உள்ள டிஷ்யூ பேப்பரில் சுருட்டப்பட்டிருப்பதை விமானக் குழு உறுப்பினர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்ட பின் தரையிறக்கபட்டது.
இதன்பின்னர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
விமான பயணிகளின் வசதிக்காக மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சந்தேகப்படும்படியான பயணிகளின் பொருட்கள் சேகரிக்கப்பட்டு தடய அறிவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூலை 21-ம் தேதி இண்டிகோ விமான பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் எனக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். உடனடியாக விமானம் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust