Indigo airlines
Indigo airlinesTwitter

விமான ஓடுதளத்தில் சாப்பிட்ட பயணிகள் - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
Published on

டெல்லியில் விமான ஓடு பாதையில் பயணிகள் உணவருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவில் வருட இறுதியில் கடும்பனி பொழிவு நிலவியது. இதன் காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவாவிலிருந்து டெல்லி செல்லவேண்டிய விமானம் பனி மூட்டம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கோவாவிலிருந்து கிளம்பும்போதே விமானம் தாமதமாக கிளம்பியதால் பயணிகள் கடும் கோபத்தில் இருந்தனர்

இந்த நிலையில் மும்பையில் விமானம் தரையிறக்கப்பட்டபோது அவர்களுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமான பயணிகள் விமான ஓடு பாதையிலே அமர்ந்து உணவு உண்டனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மேலும் அந்த விமானத்தை இயக்கிய இண்டிகோ நிறுவனம் மற்றும் மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Indigo airlines
பெண் பயணி புகாரால் 6 மணி நேரம் தாமதமான இண்டிகோ விமானம் - விசாரணையில் வெளியான உண்மை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com