சுந்தர் பிச்சை: Chennai Super Kingsஐ பாராட்டிய கூகுள் சிஇஓ - இணையத்தில் வைரலாகும் ட்வீட்

பலரும் இறுதிப்போட்டி குறித்தும், சென்னையின் வெற்றிக் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். கூகுளின் சி இ ஓ சுந்தர் பிச்சையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருந்தார்.
சுந்தர் பிச்சை: Chennai Super Kingsஐ பாராட்டிய கூகுள் சிஇஓ - இணையத்தில் வைரலாகும் ட்வீட்
சுந்தர் பிச்சை: Chennai Super Kingsஐ பாராட்டிய கூகுள் சிஇஓ - இணையத்தில் வைரலாகும் ட்வீட்Twitter

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப்போட்டியில் வென்றதை தொடர்ந்து அணியை பாராட்டி கூகுளின் சி இ ஓ சுந்தர் பிச்சை பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2023ன் ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. மழையின் காரணமாக பல தடைகளுக்கு பின்னர் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை அணி வென்றது.

இந்நிலையில், பலரும் இறுதிப்போட்டி குறித்தும், சென்னையின் வெற்றிக் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். கூகுளின் சி இ ஓ சுந்தர் பிச்சையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், “என்ன ஒரு இறுதிப்போட்டி அது! டாடா ஐபிஎல் எப்போதும் போல மிகச்சிறந்த போட்டியாகவே அமைந்தது. சிஎஸ்கேவுக்கு வாழ்த்துக்கள், அடுத்த ஆண்டு குஜராத் அணி வலுவாக திரும்பிவர வாழ்த்துக்கள்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தர் பிச்சை: Chennai Super Kingsஐ பாராட்டிய கூகுள் சிஇஓ - இணையத்தில் வைரலாகும் ட்வீட்
IPL 2023: ஐந்தாவது கோப்பையை கைப்பற்றிய CSK - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
IPL 2023: ஐந்தாவது கோப்பையை கைப்பற்றிய CSK - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
IPL 2023: ஐந்தாவது கோப்பையை கைப்பற்றிய CSK - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!twitter

மழையின் காரணமாக 171 ஆக குறைக்கப்பட்ட இலக்கை நோக்கி களமிறங்கியது சென்னை அணி. கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன் தேவை என்றிருந்த நிலையில், சிக்சர் மற்றும் ஃபோர் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துசென்றார் ஜடேஜா. இதனால் வெற்றிக்களிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை இணையம். இறுதிக்கட்டம் வரை விறுவிறுப்பாக சென்ற போட்டி, இரண்டாவது நாளிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஐந்தாவது ஐபிஎல் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல்லில் அதிக முறை கோப்பை வென்ர அணி என்கிற மும்பை இந்தியன்ஸ் சாதனையை சமன் செய்துள்ளது சிஎஸ்கே

சுந்தர் பிச்சை: Chennai Super Kingsஐ பாராட்டிய கூகுள் சிஇஓ - இணையத்தில் வைரலாகும் ட்வீட்
”நடிகருனு சொல்லாம, நண்பர்னு சொன்னதே...” பாராட்டிய ரஜினி; நெகிழ்ந்த சசிக்குமார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com