குழந்தைகளை ஏசி ரூமில் தூங்க வைக்கிறீர்களா? மனதில் கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

குழந்தைகள் ஏசி அறைகளில் தூங்குவது பொதுவானது என்றாலும், புதிதாகப் பிறந்த குழந்தையை ஏசி ரூமில் தூங்க வைப்பதற்கு முன்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
Is Your Baby Sleeping In An AC Room? 6 Things To Keep In Mind
Is Your Baby Sleeping In An AC Room? 6 Things To Keep In MindCanva

இன்று பல வீடுகளில் ஏசி, உள்ளன. பல குடும்பங்களில் கைக்குழந்தைகள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஒரே குளிரூட்டப்பட்ட அறையில் உறங்குகின்றனர்.

குழந்தைகள் ஏசி அறைகளில் தூங்குவது பொதுவானது என்றாலும், புதிதாகப் பிறந்த குழந்தையை ஏசி ரூமில் தூங்க வைப்பதற்கு முன்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தையை குளிரூட்டப்பட்ட அறையில் தூங்க வைக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே

ஏசி அறையின் வெப்பநிலையை சரிசெய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் அதிகமான குளிர் வெப்பநிலையில் இருக்கக் கூடாது. 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை செல்சியஸை செட் செய்துக் கொள்ளலாம்.

உறங்கும் போது குளிரை பராமரிக்க உங்கள் குழந்தைக்கு போர்வை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தையின் முகம் உள்ளங்கால் அல்லது தலையில் நேரடியாக ஏசி வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

குழந்தையின் தோல் மென்மையானது, எளிதில் வறண்டு போகும். நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் ஏற்படும் வறட்சியை போக்க குழந்தையின் தோலில் எண்ணெய் அல்லது மாய்ஸ்ரைசரை பயன்படுத்த வேண்டும்.

கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம் குறிப்பாக மார்பு வயிறு, முதுகு பகுதியில் ஈரப்பதத்தை தக்க வைத்து குழந்தையை சூடாக வைத்திருக்க உதவும்.

குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் தூசி அல்லது அழுக்கு சேர்வதை தடுக்க வாரம் ஒரு முறை ஏசியை சுத்தம் செய்ய வேண்டும்.

Is Your Baby Sleeping In An AC Room? 6 Things To Keep In Mind
Summer Tips: 1 மணிநேரம் ஏசி ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் ஆகும்? எப்படி குறைக்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com