ஆதித்யா எல்-1 விண்கலம் : புதிய சாதனை படைத்த இந்தியா!

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்துள்ளது.
இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்துள்ளது.
இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்துள்ளது.Twitter
Published on

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்துள்ளது.

எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும்.

புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும்.

எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது.

“ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை சூரியனின் எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தியதன் மூலம் இந்தியா மற்றுமொரு சாதனை படைத்துள்ளது.

இந்திய விஞ்ஞானிகளின் தொடர் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டு இது. மிகவும் சிக்கலான, நுணுக்கமான சாதனையை படைத்துள்ளது இஸ்ரோ. விஞ்ஞானிகளின் அசாதாரண சாதனையை நாடே பாராட்டுகிறது” என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பாஸ்தா? நாசா விண்கலம் கண்டுபிடித்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com