பெங்களூரு: போக்குவரத்து நெரிசலால் ஒரே நாளில் 225 கோடி இழப்பு- IT நிறுவனங்களின் பரிதாப நிலை

அன்று ஒரே நாளில், Outer Ring Road Companies Associationக்கு உட்பட்டு வரும் ஐடி மற்றும் பேங்க்கிங் நிறுவனங்கள் அனைத்திற்கும், மொத்தம் 28 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
outer ring road flooded in bengaluru
outer ring road flooded in bengalurutwitter
Published on

மழையின் காரணமாக ஒரே நாளில் 225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பெங்களூரு Outer Ring Road Companies Association (ORRCA), கடிதம் மூலம் கர்நாடகா முதலமைச்சருக்கு தெரிவித்திருக்கிறது.

பெங்களூரு என்றால் நம் நினைவுக்கு வரும் பல விஷயங்களில் முக்கியமான ஒன்று போக்குவரத்து நெரிசல். தற்போது மழையின் காரணமாக பெங்களூருவில் சாலையெங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இது போக்குவரத்தை இன்னும் அதிகமாக பாதித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி Outer Ring Roadல் மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது.

அன்று ஒரே நாளில், அவுட்டர் ரிங்க் ரோடில் ஏற்பட்ட சாலை நெரிசலின் காரணமாக, Outer Ring Road Companies Associationக்கு உட்பட்டு வரும் ஐடி மற்றும் பேங்க்கிங் நிறுவனங்கள் அனைத்திற்கும், மொத்தம் 28 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 225 கோடி ரூபாய்.

ORRCA கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இந்த சாலையில் உள்ள மோசமான உள்கட்டமைப்பு வசதியால் ஊழியர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் பாதிப்படைகிறது. மேலும் இது நிறுவனங்களின் செயல் திறன் மற்றும் உற்பத்தி திறனையும் பாதிக்கிறது.

ஆகஸ்ட் 30 தேதி இந்த சாலையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக சுமார் 5 மணி நேரம் ஊழியர்கள் அங்கு மாட்டிக்கொண்டனர். இதனால், அன்று ஒரு நாள் சந்தித்த இழப்பு மட்டுமே 225 கோடி ரூபாய்" எனத் தெரிவித்திருந்தது.

இந்த மோசமான கட்டமைப்பு வசதிகள், 30 சதவிகிதம் ஊழியர்கள் தான் அலுவலகத்திலிருந்து வேலை செய்கிறார்கள் என்ற போதிலும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரிவு பெங்களூருவின் வளர்ச்சியைக் கையாளும் திறன் குறித்து உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

outer ring road flooded in bengaluru
பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா - உலக பொருளாதார வளர்ச்சியில் 5வது இடம்!

"மழையின் காரணமாக ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலால் ஓ.ஆர்.ஆரில் முதலீடு செய்த சில நிறுவனங்கள், அவசர திட்டங்களை மேற்கொள்ளும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. மேலும், வீட்டிலிருந்து வேலையை தொடங்குவது, அல்லது பெங்களூருவைத் தவிர மற்ற இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு சில முக்கியமான வேலைகளை மாற்றிவிடும்படியான நிலை ஏற்பட்டதாக அக்கடிதம் கூறியது.

இது நகரம் மற்றும் மாநிலத்தின் நற்பெயர் மற்றும் பொருளாதாரத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியது என்று கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடரும் இந்த நிலையால், திட்டமிடப்பட்ட வேலைகள் தடைப்பட்டோ, அல்லது மெதுவாகவோ நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

நிலைமையை மேம்படுத்துவதற்கான தெளிவான திட்டங்களை அந்த கடிதத்தின் மூலம் ORRCA கோரியுள்ளது.

outer ring road flooded in bengaluru
பொருளாதார கஷ்டத்தில் பிரிட்டன் மக்கள், உதவிக்கரம் நீட்டிய நிறுவனம் - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com