வரலாற்றில் இன்று : உலகளாவிய பெற்றோர் தினம் - இந்த நாளில் என்ன நடந்தது?

வரலாற்றில் இன்று, அதாவது ஜூன் 1 , பின்வரும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்துள்ளன. என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
1 June What Happened On This Day In History
1 June What Happened On This Day In HistoryTwitter
Published on

ஒவ்வொரு ஆண்டின் குறிப்பிட்ட நாளில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் பல நடந்திருக்கும். வரலாறு நமது கடந்த காலத்தை மீண்டும் உயிர்ப்பிக்க உதவியாக உள்ளது.

வரலாற்றில் இன்று, அதாவது ஜூன் 1 , பின்வரும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்துள்ளன. என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்

சத்யேந்திரநாத் தாகூர் ஜூன் 1, 1842 இல் பிறந்தார். ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் தான் சத்யேந்திரநாத் தாகூர். 1864 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் ஆவார்.

1862 ஆம் ஆண்டு சத்யேந்திரநாத் தாகூர் பரீட்சைக்காக இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்றார். 1863 ஆம் ஆண்டில், அவர் சிவில் சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் தனது கல்வியை முடித்த பிறகு, அவர் 1864 இல் இந்தியா திரும்பினார். இந்தியாவின் முதல் ஐஏஎஸ்(IAS) அதிகாரி ஆவார்.

இந்தியாவின் முதல் டீலக்ஸ் டெக்கான் குயின் ரயில்

இந்தியாவின் முதல் டீலக்ஸ் டெக்கான் குயின் ரயில், ஜூன் 1, 1930 இல் இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் இரண்டு பெரிய மகாராஷ்டிர நகரங்களான மும்பை மற்றும் புனேவை இணைக்கிறது.

1 June What Happened On This Day In History
உலகின் மிகவும் விசித்திரமான ரயில் பாதைகள் - எங்கே இருக்கிறது தெரியுமா?
Milk
MilkCanva

உலக பால் தினம்

உலக பால் தினம் ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை கொண்டாடவும், ஆரோக்கியமான உணவில் பால் மற்றும் பால் பொருட்களின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் குறிக்கப்படுகிறது.

உலக பால் தினம் முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் (FAO) 2001 இல் நிறுவப்பட்டது. அன்று முதல் உலக பால் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

1 June What Happened On This Day In History
பால் தினமும் குடிப்பது நல்லதா? கெட்டதா?

உலகளாவிய பெற்றோர் தினம்

ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி உலகப் பெற்றோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளை வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும், பெற்றோர்கள் ஆற்றும் பங்கை கௌரவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நாள் தான் இது!

1 June What Happened On This Day In History
இந்த நாடுகளில் குழந்தைகளை பெற்றோர் கவனிப்பில்லாமல் தனியாக பனியில் தூங்க வைக்கின்றனர்- ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com