இந்த நாடுகளில் குழந்தைகளை பெற்றோர் கவனிப்பில்லாமல் தனியாக பனியில் தூங்க வைக்கின்றனர்- ஏன்?

ஷாப்பிங் செல்லும் போதும், உணவருந்தும் போது கடைகளுக்கு வெளியில் பனியில் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு பெற்றோர்கள் தங்கள் வேலைகளைச் செய்கின்றனர். இந்த பழக்கத்தில் சில சிக்கல்களும் இருக்கின்றன.
இந்த நாடுகளில் குழந்தைகளை பெற்றோர் கவனிப்பில்லாமல் தனியாக பனியில் தூங்க வைக்கின்றனர்- ஏன்?
இந்த நாடுகளில் குழந்தைகளை பெற்றோர் கவனிப்பில்லாமல் தனியாக பனியில் தூங்க வைக்கின்றனர்- ஏன்?Twitter

தெருவில் ஒரு கைக்குழந்தை தனியாக இருப்பதைப் பார்த்தால் நமக்கு மனம் பதறும். யார் பெற்றோர் எனக் கண்டறிந்து குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் தான் நிம்மதி என்றிருக்கும். 

ஆனால் வட ஐரோப்பியாவில் டென்மார்க், ஃபின்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட நார்டிக் நாடுகளில் இது சாதாரணமான ஒன்று. 

இந்த நாடுகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் வெட்ட வெளிகளில் கவனிக்க யாரும் இல்லாமல் குழந்தைகள் இருப்பதைப் பார்த்து அஞ்சுகின்றனர்.

ஆனால் உள்ளூர்வாசிகள் எந்த சலனமும் இல்லாமல் குழந்தைகளை ரசித்தபடி கடக்கின்றனர்.

-26 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குளிரில் குழந்தைகளை வெளியில் வைப்பது எந்தவகையிலும் நமக்கு உகந்ததாக தெரியாதுதான். 

ஆனால் இந்த பழக்கத்தைக் பல தலைமுறைகளாக இங்குள்ள மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். 

ஷாப்பிங் செல்லும் போதும், உணவருந்தும் போது கடைகளுக்கு வெளியில் பனியில் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு பெற்றோர்கள் தங்கள் வேலைகளைச் செய்கின்றனர்.

நார்வேயில் பெற்றோர்கள் குழந்தைகளை இப்படி குளிரில் தூங்க வைக்கும் போது அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுபெறும் என நம்புகின்றனர்.

இந்த நாடுகளில் குழந்தைகளை பெற்றோர் கவனிப்பில்லாமல் தனியாக பனியில் தூங்க வைக்கின்றனர்- ஏன்?
நார்வே: இங்கு இறப்பது சட்டவிரோதமா? அதிசய நகரத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம்?

ஆனால் வல்லுநர்களோ, “குழந்தைகள் வெளியில் தூங்கும் போது நீண்ட நேரம் தூங்குவர். மேலும் குளிரில் தரமான தூக்க நேரமாகவும் இருக்கும். ஆனால் அதிக கிருமிகள் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது” என்கின்றனர். 

மேலும் குளிர்காலத்தில் Hypothermia  எனப்படும் உடல் வெப்பநிலைக் குறைவு ஏற்படவும் வெயில் காலத்தில் சரும பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

சில மருத்துவர்கள் வீட்டுக்கு உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் குழந்தைகள் தூங்கும் போது யாரேணும் கவனிக்க வேண்டியது அவசியம் எனப் பரிந்துரைக்கின்றனர்.

இந்த நாடுகளில் குழந்தைகளை பெற்றோர் கவனிப்பில்லாமல் தனியாக பனியில் தூங்க வைக்கின்றனர்- ஏன்?
சாலைகளே கிடையாது, எங்கும் ஹெலிகாப்டர் தான் - உலகின் மிக பெரிய தீவு நாடு பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com