உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்கி தாம் கோயில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஸ்ரீ கல்கி தாம் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தலைமையிலான இந்த கோயில், விஷ்ணுவின் 24 வது அவதாரமாக நம்பப்படும் கல்கிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
கல்கி தாம் கோயில் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
இந்து மத நூல்களின்படி, விஷ்ணு நீதியை மீட்டெடுக்க அவதாரங்களை எடுக்கிறார். கல்கி அவதாரம் விஷ்ணுவின் 24 வது அவதாரமாக கணிக்கப்படுகிறது. இது கலியுகத்தின் முடிவில் வெளிப்படுகிறது. விஷ்ணுவின் 24 அவதாரங்களை வேதங்கள் விவரிக்கின்றன. அவற்றில் 23 ஏற்கனவே பூமியில் அவதரித்தவை.
கடவுள் கல்கிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், அவதாரத்திற்கு முன்பே நிறுவப்பட்ட முதல் ’கோயில்' என்பதால் உலகின் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவிலில் உள்ள பத்து கருவறைகள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கிறது.
மத நூல்களின்படி, கிருஷ்ணர் வெளியேறிய பிறகு தொடங்கிய கலியுகம், 5126 ஆண்டுகள் கடந்து 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் என்று நம்பப்படுகிறது. சாவான் மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஐந்தாம் நாளில் புஷ்ய நட்சத்திரத்தில் குரு, சூரியன் மற்றும் சந்திரன் இணையும் போது கல்கியின் பிறப்பு நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பதிவுகளின்படி, கோவில் வளாகத்திற்குள் மொத்தம் 68 யாத்திரை தலங்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust