காஞ்சிபுரம் vs பனாரஸ்: பட்டுப் புடவைகளின் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?

இரண்டுமே பட்டு புடவைகள் தானே இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம், எடையில் தொடங்கி அதனை நெசவு செய்யும் முறை வரை வேறுபாடுகள் இருக்கின்றன.
காஞ்சிபுரம் vs பனாரஸ்: பட்டுப் புடவைகளின் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?
காஞ்சிபுரம் vs பனாரஸ்: பட்டுப் புடவைகளின் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?twitter
Published on

என்ன தான் மார்டனாக உடையணிந்தாலும், எல்லா பெண்களுக்கும் புடவை மீதான பிரியம் இன்றும் சொற்களுக்குள் அடங்காதது தான்.

சுங்குடி, கூரை புடவை, சிந்தெட்டிக் புடவை, பட்டுப்புடவை என புடவை வகைகள் ஏராளம். இன்றைய டிரெண்டிற்கு ஏற்றாற்போல இன்ஸ்டண்ட் புடவைகளும் வந்துவிட்டன. பாக்கெட் வைத்த புடவைகள், ரிவர்சிபிள் புடவை என வகைகள் ஏராளம்.

ஆனாலும், பட்டுப்புடவையின் மீது ஒரு தனிப்பட்ட ஆரவம் இருக்க தான் செய்கிறது.

இந்த பட்டுப்புடவைகளில் பிரபலமாக இருப்பது காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளும், பனாரசி பட்டுப்புடவைகளும்.

இந்த இரண்டு வகை புடவைகள் வித்தியாசத்தை எப்படி கண்டறிவது?

பனாரசி பட்டுப்புடவைகள்

இரண்டுமே பட்டு புடவைகள் தானே இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம், எடையில் தொடங்கி அதனை நெசவு செய்யும் முறை வரை வேறுபாடுகள் இருக்கின்றன.

பனாரஸ் பட்டுப்புடவைகளின் பூர்விகம், முகலாய ஆட்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பனாரஸில் நெசவு செய்யப்படும் இந்த புடவைகலில் முகலாய காலத்தின் சாயலை நாம் காணலாம்.

நெசவாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பட்டு நூல்களை பயன்படுத்தி, மலர்கள் அல்லது வேறு சில டிசைன்களை நெய்கின்றனர். இவற்றை கல்கா அல்லது பெல் என்று அழைக்கின்றனர்

பனாரசி பட்டுப்புடவைகளை தயாரிக்க 15 நாட்களில் இருந்து 6 மாதங்கள் வரைக்கூட ஆகிறது. இது அந்த புடவையில் என்ன டிசைன் போடப்படுகிறது என்பதை பொறுத்து மாறுபடுகிறது.

பனாரசி மணப்பெண்களுக்கான புடவைகளில் கட்டான் அல்லது தூய பட்டு, நவீன ஷட்டிர், ஆர்கன்சா, ஜார்ஜெட், ஜங்லா, புடிடார், டான்சோய், கட்வொர்க் மற்றும் டிஷ்யூ ஆகியவை அடங்கும்.

காஞ்சிவரம் புடவைகள்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் நெசவு செய்யப்படும் இந்த புடவைகளும், பட்டில் தயாரிக்கப்படுவது தான் என்றாலும், அதன் வேலைபாடுகளில் மாறுபடுகிறது. இந்த புடவைகளில் தங்க ஜரிகைகள் விரிவான அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

காஞ்சிவரம், காஞ்சிபுரம், காஞ்சி பட்டு புடவைகள் அனைத்தும் ஒரே புடவையின் மாறுபாடுகள்.

காஞ்சிவரம் புடவைகளும் திருமண புடவைகள் தான். பல தரப்பட்ட துணி வகைகளால் ஆனது. காஞ்சிவரம் புடவைகள் தூய மல்பெரி பட்டுகளால் செய்யப்படுகின்றன, அவை இந்திய மணப்பெண்களிடையே பிரபலமான தேர்வாக இருக்கிறது.

வேறுபாடுகள் என்னென்ன?

பட்டு நூல்

காஞ்சிவரம் பட்டுப்புடவைகள் முழுக்க மல்பெரி பட்டு நூலினால் செய்யப்படுகிறது. இது தென்னிந்திய பட்டுப்புடவையாகும். இந்த புடவைகளில் முந்தானையையும் புடவையயும் இணைத்து நெய்கின்றனர். இதனை பிண்டி என்று அழைக்கின்றனர்.

பனாரசி புடவைகள் நுணுக்கமாக நெய்யப்பட்ட பட்டுகளால் ஆனவை. அவை வெளிர் மற்றும் உள் பார்டரில், ஜாலார் என்று அழைக்கப்படும் ஒரு குறுகிய விளிம்பு வடிவத்தைக் கொண்டுள்ளன.

புடவைகளின் வடிவமைப்பு

பனாரசி ஜரிகைகளில் மலர் வடிவங்கள் மற்றும் தாவரங்கள் இருக்கிறது.

காஞ்சிவரம் பட்டுப் புடவைகளில் விரிவான வேலைபாடுகள், கோடுகள், கட்டங்கள் ஆகியவை, தங்கம் அல்லது வெள்ளி நூல்களை வைத்து நெய்யப்படுகிறது.

புடவைகளின் விலை

காஞ்சிவரம் பட்டுப்புடவையின் விலை ரூ. 2500 முதல் ரூ. 50,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கிறது.

பனாரசி சேலையின் விலை ரூ. 2000 முதல் ரூ. 70,000 வரை விற்கப்படுகிறது.

காஞ்சிபுரம் vs பனாரஸ்: பட்டுப் புடவைகளின் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?
காஞ்சிப்பட்டு வாங்கும் போது ஒரிஜினலானு எப்படி கண்டுப்பிடிப்பது? 6 சூப்பர் டிப்ஸ்

சேலைகளின் சாயல்கள்

பனாரசி புடவைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் சிவப்பு வரையிலான வண்ணங்களில்கிடைக்கிறது.

காஞ்சிவரம் புடவைகள் சாம்பல், பழுப்பு போன்ற மென்மையான வண்ணங்களில் வருகின்றன.

புடவைகளில் கலைப்படைப்பு

காஞ்சிவரம் புடவைகளில் பெரும்பாலும் பறவைகள், மலர்கள் என இயற்கை சார்ந்த வடிவங்களோ, ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளையோ வடிவமைக்கின்றன.

பனாரசி புடவையில் உள்ள பெரும்பாலான வடிவங்கள் முகலாய ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டவை, அதாவது மலர் மற்றும் பசுமையான காட்சிகள் இதில் காணப்படுகிறது.

உற்பத்தி பகுதி

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் கிராமத்தில் தூய காஞ்சிவரம் புடவைகள் தயாரிக்கப்படும் அதே வேளையில், உண்மையான பனாரசி புடவைகள் வட இந்தியாவில் உள்ள வாரணாசி மாநிலத்தில் காணப்படுகின்றன.

பட்டு நூல்களை உருவாக்கும் செயல்முறை

இந்த புடவைகளின் ஜரி இழைகள் மாறுபடுகின்றன. காஞ்சிபுரம் பட்டுகளில் ஜரி நூல்கள் சிவப்பு பட்டு மற்றும் வெள்ளி நூல்களை ஒன்றாக இணைத்து உருகிய தங்கத்தில் நனைத்து தயாரிக்கப்படுகின்றன.

பனாரசி புடவைகளில் தங்கக் கம்பிகள் பட்டு நூல்களைச் சுற்றி உருட்டப்பட்டு இயந்திரத்தைப் பயன்படுத்தி தட்டையாக்கப்படுகின்றன.

பட்டின் தரம்

காஞ்சிவரம் பட்டு மற்ற பட்டுகளை விட மிகவும் தடிமனாக இருக்கும்

பனாரசி பட்டு மென்மையாக இருக்கின்றன.

காஞ்சிபுரம் vs பனாரஸ்: பட்டுப் புடவைகளின் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?
Kanchipuram: பட்டின் தலைநகர் காஞ்சிபுரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com