Karnataka : பள்ளிகளில் திப்பு சுல்தான் பாடங்களை குறைக்க பாஜக அரசு முடிவு

புராணங்கள் அடிப்படையிலான நூலை பாடநூலில் சேர்க்கவும் அதே வேளையில் மைசூரின் புலியாக கருதப்படும் திப்பு சுல்தானின் வரலாற்றுப்பாடத்தைத் திருத்தவும் பாஜக அரசு முடிவெடுப்பது மக்களிடையே கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
Tipu Sultan
Tipu SultanTwitter
Published on

கர்நாடக பாடத்திட்டத்திலிருந்து திப்பு சுல்தானின் பெருமையைப் பேசும் பகுதிகளை நீக்கக்கோரி பாடநூல் கழகத்தைக் கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. திப்பு சுல்தான் வரலாற்றை முழுவதுமாக நீக்கிவிடாமல் அதன் மிகைப்படுத்தப்பட்ட பகுதிகளை மட்டும் நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக அரசு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. திப்பு சுல்தான் முஸ்லீம் மன்னர் என்பதால் பாஜக இது போன்ற நடவடிக்கையை எடுக்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

BJP
BJPTwitter

பாஜக கட்சியினர் திப்பு சுல்தான் சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல அவர் இந்துக்களைத் துன்புறுத்தியவர் என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த கூற்று வரலாற்றைத் திரிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை சில நாட்களுக்கு முன்பு தான் முடிவடைந்த நிலையில் அரசின் இந்த கோரிக்கை மீண்டும் பிரச்சனைகளைத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது எனவும் பாஜக அரசின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

குஜராத் பள்ளிகளில் பகவத்கீதை பாடமாக்கப்படும் என்று அம்மாநில பாஜக அரசு கூறியதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பகவத்கீதையை பள்ளிகளில் கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்தது. புராணங்கள் அடிப்படையிலான நூலை பாடநூலில் சேர்க்கவும் அதே வேளையில் மைசூரின் புலியாக கருதப்படும் திப்பு சுல்தானின் வரலாற்றுப்பாடத்தைத் திருத்தவும் பாஜக அரசு முடிவெடுப்பது மக்களிடையே கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

Tipu Sultan
Bhagavad Gita : குஜராத் பள்ளிகளில் கட்டாயமாகும் பகவத்கீதை, பாஜக மூவ்; காங்கிரஸ் ஆதரவு?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com