சஷிகாந்த் செந்தில்: கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் 'master mind'- யார் இந்த ex-IAS அதிகாரி?

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது மத்திய பாஜக அரசு மீதான அதிருப்தியினால் 2019ம் ஆண்டு தனது பதவியை துறந்து 2020ல் காங்கிரஸில் இணைந்தார் சஷிகாந்த். இவர் இந்த தேர்தல் வெற்றிக்கு எப்படி அடித்தளமாக செயல்பட்டார் என்பதைப் பார்க்கலாம்.
சஷிகாந்த் செந்தில்: கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் 'master mind'- யார் இந்த ex-IAS அதிகாரி?
சஷிகாந்த் செந்தில்: கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் 'master mind'- யார் இந்த ex-IAS அதிகாரி?Twitter
Published on

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. காங்கிரஸின் எதிர்காலத்துக்கு இந்த வெற்றி இன்றியமையாதது என்பதை நாம் அனைவருமே அறிவோம். 

சித்தராமையா, டி.கே,சிவக்குமார் போன்ற தலைவர்களும் அவர்களின் பிரச்சாரமும் எந்த அளவுக்கு வெற்றிக்கு பங்களித்ததோ அதேப்போல திரைக்கு பின்னால் இருந்து பலர் இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர்.

அதில் முக்கியமாக குறிப்பிடபடுபவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சஷிகாந்த் செந்தில். குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது மத்திய பாஜக அரசு மீதான அதிருப்தியினால் 2019ம் ஆண்டு தனது பதவியை துறந்து 2020ல் காங்கிரஸில் இணைந்தார்.

கர்நாடகாவில் சித்ரதுர்கா, ரைசூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியாளராக பணியாற்றினார் சஷிகாந்த் செந்தில்.  இதனால் களத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த ஆழமான அனுபவ அறிவு இவருக்கு இருந்தது.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதிகளை உருவாக்குவதில் இவர் முக்கிய பங்காற்றினார். மற்றும் தேர்தல் களத்திலும் இவரது வேலைகள் தாக்கத்தை ஏற்படுத்தின.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023ல் காங்கிரஸ் வெற்றிக்கு இவர் காரணமாக இருந்தது எப்படி எனக் காணலாம்.

5 தேர்தல் வாக்குறுதிகள்

  1. கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் க்ருஹ ஜோதி யோஜனா திட்டம். 

  2. குடும்பத்தலைவியாக இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் க்ருஹ லக்‌ஷ்மி யோஜனா திட்டம். இதன் மூலம் 1.5 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.

  3. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் அன்ன பாக்யா திட்டம்.

  4. பட்டம் பெற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கும் யுவ நிதி திட்டம். டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். 

  5. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கும் உசித ப்ரயாணா திட்டம்.

வார் ரூம்
வார் ரூம்

இந்த வாக்குறுதிகள் சாமானிய மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. மிடில் கிளாஸ் மக்களின் கவனத்தை ஈர்க்க உதவின. இது தவிர தேர்தல் காலத்தில் செந்திலின் காங்கிரஸ் போர் அறை (War Room) வெற்றிக்கு வித்திட்டது.

வார் ரூம்

இந்த போர் அறை மக்களிடம் இருந்து அவர்களது தேவையைத் தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது. தாலுகா, கிராமம், நகரம் என ஒவ்வொரு பகுதியிலும் மக்களுக்கான தேவைகள் என்னென்ன என்பதை ஆராய்ந்து முடிவுகளை வழங்கினர்.

இந்த போர் அறை முழுக்க முழுக்க மக்களுக்கான பிரச்னைகளை அதற்கான தீர்வுகளை நோக்கியதாக இருந்தது. மக்களின் கருத்துகளில் இருந்து காங்கிரஸின் தேர்தல் யுத்திகள் உருவாக்கப்பட்டன. 

சஷிகாந்த் செந்தில்: கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் 'master mind'- யார் இந்த ex-IAS அதிகாரி?
அமித்ஷா நேர்காணல்: மோடி-அதானி கூட்டணி முதல் பாஜக மார்கெடிங் வரை- என்ன பேசினார்?

பஜ்ரங் தல் தடை

சஷிகாந்த் செந்தில் மற்றும் அவரது குழுவினர் மைசூரு பகுதியில் நடத்திய சர்வே அடிப்படையில் பஜ்ரங் தல் தடை அறிவிக்கப்பட்டது. இது மற்றொரு எதிர்கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெறுவதைத் தடுத்தது எனக் கூறுகின்றனர்.

கர்நாடகாவில் தேர்தலை குறிவைத்து ஓராண்டு முன்னதாகவே சஷிகாந்த் செந்தில் குழுவினர் களத்தில் இறங்கினர். பெரிய அளவில் மீடியா குழுக்களை உருவாக்கி மக்களிடம் நேரடித்தொடர்பை ஏற்படுத்தியதன் விளைவாக பல யூகங்களை வகுத்துள்ளனர். 

பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை பாம்பு என மல்லிகார்ஜுனா கார்கே பேசியது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.

சஷிகாந்த் செந்தில்: கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் 'master mind'- யார் இந்த ex-IAS அதிகாரி?
ஸ்டாலின் - கனிமொழி டு ராகுல் - பிரியங்கா; இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத உடன்பிறப்புகள்

அப்போது பிரியங்கா காந்தி, “ஒரு பிரதமர் மக்களிடம் அவர்களின் பிரச்னைகள் குறித்துப் பேசாமல் தான் தாக்கப்பட்டதாக அழுவதை முதன்முறையாக பார்க்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த சம்வத்தை முன்னிட்டு “க்ரை பிஎம்” என்ற ட்ரெண்டை மோடிக்கு எதிராக உருவாக்கியது சஷிகாந்த் செந்திலின் அணி.

தேர்தலின் போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினர். அந்த தருணத்தில் பசவராஜ் பொம்மையின் ஆட்சி “40% கமிஷன் அரசு” என வலிமையான தாக்குதலை தொடுத்தது இவரது குழு.

சஷிகாந்த் செந்தில்: கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் 'master mind'- யார் இந்த ex-IAS அதிகாரி?
கர்நாடகா: அனுஷ்கா முதல் ரஷ்மிகா மந்தனா வரை - இந்திய சினிமாவை ஆளும் கன்னடத்து பைங்கிளிகள்

கடந்த ஆண்டு பசவராஜ் பொம்மை ஆட்சியில் இருக்கும் ஊழல்களைக் குறிப்பிடும் விதமாக “பே சிஎம்” என போஸ்டர்களை ஒட்டி “40% இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்” என எழுதி பிரச்சாரம் செய்தனர்.  

அரசுக்கு எதிராக புகார் தெரிவிக்க விரும்பும் மக்கள் www.40percentsarkara.com என்ற வலைத்தளத்தில் தெரிவிக்கலாம் என காங்கிரஸ் அறிவித்தது. 

இது போன்ற பிரச்சார வடிவங்கள் பாஜக மீதான மக்களின் எண்ணத்தை குலைத்து காங்கிரஸ் வெற்றிக்கு அடித்தளமிட்டன. சஷிகாந்த் செந்தில் காங்கிரஸின் வெற்றிக்கு இன்றியமையாத மூளையாக இருந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.

சஷிகாந்த் செந்தில்: கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் 'master mind'- யார் இந்த ex-IAS அதிகாரி?
கர்நாடகா : மீண்டும் முதல்வராவாரா சித்தராமையா? - ஒரு பிளாஷ் பேக்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com