தெருவோரங்களில் வேற்கடலை விற்கும் மாணவி - பள்ளிப் படிப்பை தொடர போராடும் இளம்பெண்!

மூத்த சகோதரியின் திருமணத்திற்குப் பிறகு குடும்பம் கடன் வலையில் சிக்கிக் கொண்டது. இப்படி ஒரு கடினமான சூழலிலும் தனது பள்ளி படிப்பை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று வினிஷா போராடி வருகிறார்.
Kerala Class 12 student sells peanuts after school
Kerala Class 12 student sells peanuts after schoolTwitter
Published on

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் கடலை விற்று தனது பள்ளி படிப்பை தொடர்ந்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவி வினிஷா பலரின் கவனத்தை பெற்று வருகிறார்.

தினக்கூலி தொழிலாளியான வினிஷாவின் தந்தை, கடலை விற்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். வாடகை வீட்டில் இவர்கள் வசிக்கிறார்கள்.

மூத்த சகோதரியின் திருமணத்திற்குப் பிறகு குடும்பம் கடன் வலையில் சிக்கிக் கொண்டது. இப்படி ஒரு கடினமான சூழலிலும் தனது பள்ளி படிப்பை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று வினிஷா போராடி வருகிறார்.

வினிஷா பள்ளியில் வகுப்பு முடித்துவிட்டு வந்து மாலை நேரங்களில் வேர்க்கடலை விற்று வருகிறார்.

கடினமான காலங்களுக்கு மத்தியில் கல்வியைத் தொடரும் இவரின் மன உறுதியை மக்கள் பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உழைத்து வாழ்வதன் கண்ணியம், பிறர் முன் கைகளை நீட்டுவதை விட மேலானது. உங்களைப் பாராட்டுகிறேன் என்று இணையவாசி ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

Kerala Class 12 student sells peanuts after school
பீகார் : கல்லூரி வாசலில் டீ விற்கும் பட்டதாரி இளம்பெண் பிரியங்கா

மற்றொரு பயனர் நீங்கள் பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றார்.

இது குறித்து வினிஷா கூறுகையில், கடலை விற்பது என்பது பதின்ம வயதினருக்கு நிச்சயம் புதிது!

சிலர் தன்னை கேலி செய்வதாகவும், தரக்குறைவான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், அவர் கூறினார். மேலும் இந்த வயதில் ஏன் வேலை செய்கிறீர்கள் என்று சிலர் கேட்பதாகவும் அவர் கூறினார்.

Kerala Class 12 student sells peanuts after school
"McDonald's வேலை வேண்டாம்" : தெருவோரங்களில் இட்லி விற்கும் பி.காம் பட்டதாரி | Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com