கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?

எல்லா ஊரிலும் சென்று திரும்பும் போது, 'நன்றி மீண்டும் வருக' என போர்ட் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். கொல்லங்கோடு மக்கள் "தயவு செய்து மீண்டும் வராதீர்கள்' என போர்டு வைக்கும் மனநிலையில் இருக்கின்றனர்.
கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?
கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?Twitter

சுற்றுலாத் துறை முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்கள் இதற்கு முக்கியமான காரணம் எனலாம்.

ஒரு ரீல்ஸ் வைரலானாலே போதும் ஒரு இடத்தின் பிரபலத்துவம் ஓவர் நைட்டில் அதிகரித்துவிடும். அப்படி ட்ரெண்டான ஒரு கிராமம் தான் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு.
எல்லா ஊரிலும் சென்று திரும்பும் போது, 'நன்றி மீண்டும் வருக' என போர்ட் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். கொல்லங்கோடு மக்கள் "தயவு செய்து மீண்டும் வராதீர்கள்' என போர்டு வைக்கும் மனநிலையில் இருக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக இந்த கிராமத்துக்கு அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருவது தான் இந்த நிலைக்குக் காரணம்.

இந்தியாவின் அழகான கிராமம்

கொல்லங்கோடு பகுதியில் மலையாள சினிமாக்கள் சில எடுக்கப்பட்டிருப்பதால் ஏற்கெனவே ஓரளவு பிரபலமான கிராமமாக தான் இருந்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த ஒரு பதிவில் இந்தியாவின் 10 அழகிய கிரமங்கள் என்ற பட்டியலில் கொல்லங்கோடு இடம் பெற்றிருக்கும்.இதன் பிறகு பயண விரும்பிகள் யாவரின் பக்கெட் லிஸ்டிலும் இடம் பிடித்தது கொல்லங்கோடு. பாலக்காடு முழுவதிலும் இருந்தும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் குவியத் தொடங்கியிருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் கொல்லங்கோடு கிராமத்தின் அழகை எடுத்துரைக்கும் புகைப்படங்களும் ரீல்களும் கொட்டின.

சுற்றுலாப்பயணிகளால் வந்த சோதனை

கொல்லங்கோடு கிராமத்தின் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் மறுபக்கம் அதனைப் பாழக்கும் வேலைகளையும் செய்து வருகின்றனர்.

ஆன்லைனில் அடுத்தடுத்து வந்த ரீல்ஸ்கள், கொல்லங்கோடு கிராமத்தில் பிளாஸ்டிக்குகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே கிடப்பதைக் காட்டின.

வயல் வெளி, ஆறு, குளம் எல்லாம் சுற்றுலாப்பயணிகள் வருகையால் குப்பையாவதாக உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டனர்.

கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?
பீகார் : ஒரே ஊரில் 300 ஐஐடி மாணவர்கள் - கல்வியில் கலக்கும் அடடே கிராமம்!

மேலும் இந்த கிராமத்தின் குறுகிய சாலையில் முடிவே இல்லாமல் சுற்றுலா வாகனங்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன.
கிராமத்தில் பார்கிங் வசதி கூட இல்லாத அளவு கார்கள் வந்து குவிகின்றன.
பயணிகள் விட்டுச் செல்லும் குப்பைகளை அப்புறப்படுத்தும் வசதி கூட இல்லாததால் கிரமமக்கள் தவித்து வருகின்றனர்.

கிராம மக்கள், தாங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் எங்கள் கிராமத்தை பராமரிக்க சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் என்கின்றனர்.

கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?
பேச்சுலர்கள் கிராமம் To பேய் கிராமம் - இந்தியாவின் தனித்துவமான கிராமங்கள் பற்றி தெரியுமா?


இணையத்தில் இந்த கிராமம் வைரலானதால் பாலக்காடு மாவட்ட அட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கிராமத்தை பார்வையிட்டனர்.

அதிகாரிகள் கொல்லங்கோடு கிராமத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

கொல்லங்கோடு அரண்மனை, கச்சம்குறிச்சி கோவில், நீர்வீழ்ச்சி என இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் இருக்கின்றன.

கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?
இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com