இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை!

இந்த கிராமத்துக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் மகாராஷ்டிரா அரசு வழங்குகிறது. இதற்கான தொகையை கர்நாடக அரசு வழங்கிவிடும். 2011ம் ஆண்டு திடீரென ஒருநாள் மகாராஷ்டிரா அரசு மின்சாரத்தை நிறுத்தியது...
இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை!
இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை!Indian Village (Represented)
Published on

கர்நடகாவில் உள்ள சொண்டி முகேட் கிராமம் நாட்டிலேயே மிகவும் வித்தியாசமானதாகவும் சிக்கலானதுமாக இருக்கிறது.

இந்த கிராமத்தை சுற்றி இருக்கும் பகுதிகள் எல்லாம் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. கர்நாடகாவின் எல்லைக்கு வெளியில் இருந்தாலும் இந்த மக்கள் தாங்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

சராசரியாக 1600 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் மக்கள் கன்னடம் பேசுகின்றனர். மகாராஷ்டிராவுடன் கிராமத்தை இணைப்பதற்கு எதிரானவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த கிராமத்தில் மராத்தி மக்களும் இருந்தாலும் அவர்களும் கன்னடத்தை தங்கள் மொழியாக கருதி ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த கிராமத்தில் மராத்தி வழி பள்ளியை மட்டுமே கட்டித்தந்துள்ளது அரசு. 8ம் வகுப்பு வரை
மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

ஒரே ஒரு ஆசிரியர் கன்னடம் கற்றுக்கொடுக்க பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆனால் அவர் மற்றொரு கிராமத்திலும் இதேப் போல கன்னடம் கற்றுக்கொடுப்பதால வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே இந்த பள்ளிக்கு வருகிறார்.

இந்த கிராமத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வணிகம் செய்பவர்கள் இரண்டு மாநில அதிகாரிகளையும் சமாளிக்க வேண்டும்.

இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை!
இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்?

இந்த கிராமத்துக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் மகாராஷ்டிரா அரசு வழங்குகிறது. இதற்கான தொகையை கர்நாடக அரசு வழங்கிவிடும்.

2011ம் ஆண்டு கர்நாடக அரசு 3 ஆண்டுகளாக கட்டணம் கட்டவில்லை எனக் கூறி மகாராஷ்டிரா அரசு மின்சாரத்தை நிறுத்திய சம்பவமும் நடந்தது.

இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை!
கன்னட சினிமா : KGF தெரியும் இந்த 50 கன்னட படங்கள் தெரியுமா? IMDB recommended Kannada films



"ஆஸ்கார்ட் என்பது அதன் மக்கள் தான்" என மார்வல் ஹீரோ தோர் கூறுவது போல ஒரு நிலப்பரப்பு எந்த மாநில எல்லையில் இருக்கிறது என்பதை விட அந்த மக்கள் தங்களை எந்த மாநிலத்தவராக உணருகின்றனர் என்பது முக்கியம்.

இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு சொண்டி முகேட் கிராமம்.

இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை!
கர்நாடகா: கூர்க் முதல் பதாமி வரை - மழைக்காலத்தில் செல்வதற்கு சிறந்த இடங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com