பல் துலக்காமல் முத்தம் - மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் - என்ன நடந்தது?

பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை, அவரது கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
murder (Rep)
murder (Rep)Canva
Published on

நாள்தோறும் ஏதோ ஒரு காரணத்துக்காகக் கணவன் மனைவி இடையே பிரச்னை வருகிறது. அந்த பிரச்னையைப் பேசி தீர்த்துக்கொள்ளாமல் பிரிந்து செல்கின்றனர். சில இன்னும் கோபத்தின் உச்சத்திற்குச் சென்று கொலை செய்யத் துணிகின்றனர்.

அப்படி சாதாரணமாக கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு, இறுதியில் உயிரைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ், இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு ஒன்றைரை வயதில் குழந்தை உள்ளது.

அவினாஷ், தினமும் காலையில் எழுந்தவுடன் தனது குழந்தையைக் கொஞ்சுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Baby and father ( Rep)
Baby and father ( Rep)Canva

அதுபோல் ஒரு நாள் அவினாஷ், குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சி உள்ளார். இதைப் பார்த்த தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் எனக் கேட்டுள்ளார்.

இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் முற்றவே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் கோபமடைந்த அவினாஷ் அருகிலிருந்த கத்தியை எடுத்து மனைவியைக் குத்தி உள்ளார்.

இதில் பலத்த படுகாயம் அடைந்த தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவினாசை கைது செய்தனர்.

murder (Rep)
திருமணத்திற்கு பிறகு கணவர் 'பெண்' என கண்டுப்பிடித்த காதலி - இது இந்தோனேசியா சோகம்
Crime
CrimeCanva

இதே போல மதுரையில் தினந்தோறும் ரசம் சாதம் வைத்தாகக் கூறி வந்த பிரச்சினையில் மனைவியைக் கட்டையால் தாக்கி கணவர் கொலை செய்தார். டெல்லியில் உணவு பரிமாற மறுத்ததால் கணவன் மனைவியைத் தலையணை வைத்து கொலை செய்தார்.

இப்படிச் சிறு சிறு பிரச்சனைகளைப் பேசி தீர்த்துக்கொள்ளாமல் கொலை செய்யும் அளவிற்குத் துணிகிறார் என்பது தான் சற்று வருத்தமாக உள்ளது.

murder (Rep)
உணவு பரிமாற மறுத்த மனைவியை கொலை செய்த கணவர் - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com