சயனைடின் சுவையை உலகுக்கு கூறிய ஒரே மனிதர் - ஒரு திகில் கதை!

பொட்டாசியம் சயனைடை ஒரு முறை வாயில் வைத்தால் அடுத்த சில நொடிகளிலேயே இறந்துவிடுவோம். இதனால் அதன் சுவை யாருக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் உயிருடன் இல்லை.
சயனைடின் சுவையை உலகுக்கு கூறிய ஒரே மனிதர் - ஒரு திகில் கதை!
சயனைடின் சுவையை உலகுக்கு கூறிய ஒரே மனிதர் - ஒரு திகில் கதை!Twitter

பொட்டாசியம் சயனைடு மிகவும் ஆபத்தான வேதிப்பொருளாகும். இதன் சுவையை உலகத்தில் ஒருவர் கூட அறிந்ததில்லை. அறிந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.

ஆம், பொட்டாசியம் சயனைடை ஒரு முறை வாயில் வைத்தாலே நாம் இறந்துவிடுவோம். அதுவும் அடுத்த சில நொடிகளிலேயே!

இதனால் பொட்டாசியம் சயனைடின் சுவை குறித்த எந்த  தரவும் இதுவரை நம்மிடையே கிடையாது. ஒன்றைத் தவிர! பொட்டாசியம் சயனைடு சுவை குறித்து உலகில் இருக்கும் ஒரே எழுதப்பட்ட ஆவணம் ஒரு இந்தியரின் தற்கொலை குறிப்பு. 

கேரளாவைச் சேர்ந்த எம்.பி.பிரசாத் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார். பாலக்காடைச் சேர்ந்த இவருக்கு அப்போது 32 வயது. 

ஜூன் 17ம் தேதி பாலக்காட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்துள்ளார். பிரசாத் ஒரு பொற்கொல்லர் என்பதனால் அவரால் சயனைடு வாங்க முடிந்திருக்கிறது.

சயனைடை சாப்பிட்டு மரணிக்க முடிவு செய்த பிரசாத் அதனை கலந்து குடிக்க மது வாங்கி வைத்துள்ளார். மதுவில் சயனைடை போட்டு அதனை பேனாவின் மறுமுனையால் கலக்கியுள்ளார்.

பின்னர் தனது தற்கொலை குறிப்பை எழுதத்தொடங்கியுள்ளார். எழுதும் போது எதர்ச்சையாக அவர் பேனாவின் மறுமுனையை வாயில் வைத்திருக்கலாம் எனக் காவலர்கள் தெரிவித்திருந்தனர்.

சயனைடின் சுவையை உலகுக்கு கூறிய ஒரே மனிதர் - ஒரு திகில் கதை!
மாங்குரோவ் முருகேசன்: ”நான் எங்கும் போகமாட்டேன்” தீவை காப்பாற்ற போராடும் தனி ஒருவனின் கதை!

அவரது தற்கொலை குறிப்பில் பொருளாதார கஷ்டம் குறித்து சில வரிகள் எழுதிய பிறகு, “டாகடர்ஸ், நான் சயனைடை சுவைத்துவிட்டேன். இது என் நாக்கை சுடுகிறது உறைப்பாக இருக்கிறது.” என எழுதியுள்ளார்.

“இவருடைய தற்கொலை குறிப்பு ஒரு ஆவணம். இதுவரை சயனைடின் சுவையக் கூறியவர்கள் யாரும் கிடையாது.” என பலரும் கூறினர்.

சிலி எழுத்தாளரான பெஞ்சமின் லபாட் எழுதிய " When We Cease to Understand the World " என்ற புத்தகத்தில் பிரசாத்தின் தற்கொலை குறிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

சயனைடின் சுவையை உலகுக்கு கூறிய ஒரே மனிதர் - ஒரு திகில் கதை!
பிரசன்னா குமார்: 4 நாட்களில் காஷ்மீர் டு கன்னியாகுமரி சென்ற மாற்றுத்திறனாளி- ஒரு சாகச கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com