ஹைத்ராபாத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரசன்னா குமார். இவர் கன்னியாக்குமரி முதல் காஷ்மிர் வரை 37,000 கிலோ மீட்டர் பைக் பயணத்தை தனி மனிதராக முடித்துள்ளார்.
இந்த நீண்ட பயணத்தை அவர் வெறும் 4 நாட்களில் முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசன்னா குமார் ஒரு நாள் காலையில் நண்பர்களுடன் உணவருந்தி கொண்டிருந்தபோது அவருக்கு கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை பைக்கில் பயணம் செய்யும் எண்ணம் தோன்றியிருக்கிறது.
முதலில் நண்பர்களுடனேயே செல்ல பிரசன்னா திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரது நண்பர்கள் அவரைவிட நல்ல பைக்கு வைத்திருந்ததால் அவர்களுடன் பயணிக்க முடியாமல் போயிருக்கிறது.
இதனால் அவர் தனியாக பயணிக்க முடிவு செய்தார். அவருடைய பைக்கிலேயே கனவு பயணமான கன்னியாக்குமரி முதல் காஷ்மீரைத் தொடர்ந்தார்.
அவரது இந்த விரைவான பயணத்தின் மூலம் ”பைக்கை ஓட்டும் நபர் தான் முக்கியம், பைக் இல்லை” என நிரூபிக்க விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சில ஆரம்ப திட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு பயணத்தை தொடங்கியுள்ளார். ஆனால் அவரே எண்ணாத வண்ணம் விரைவாக பயணத்தை முடித்துள்ளார்.
3,700 கிலோ மீட்டரை கடக்க அவருக்கு நான்கரை நாட்கள் தான் ஆகியிருக்கிறது. பலர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் பயணித்தாகும் பிரசன்னா போன்றவர்களைப் பார்ப்பது அரிதுதான்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust