ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - தொடரும் உணவகங்களின் அலட்சியம்

சென்னையில் பிரபல உணவகமான அஞ்சப்பர் ஹோட்டலை ஆய்வு செய்ததில் பழைய கிரில் சிக்கின் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
kerala - snacks bar
kerala - snacks barTwitter

சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களால் தொடர் உடல்நலக் கோளாருகள் ஏற்பட்டு வருகின்றன. கேரளாவில் அது போன்ற உணவகத்தின் போக்கு ஒரு உயிரையே பறித்திருக்கிறது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் பேருந்து நிலையம் அருகே ஐடியல் ஸ்னாக்ஸ் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையம் அருகே உணவகம் அமைந்துள்ளதால், அங்கு மக்கள் அதிகம் கூடுவது வழக்கம்.

இரு தினங்களுக்கு முன்னர் அந்த உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட சுமார் 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அதில் தேவநந்தா என்ற பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவகத்தில் சாப்பிட்ட ஷவர்மாதான் ஃபுட் பாய்சனாக மாறியதாகவும், அதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

இதையொட்டி காஞ்சங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கடையைச் சோதனை நடத்தினர். அத்துடன் கடை ஊழியரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Grilled Chicken
Grilled ChickenTwitter

இதே போன்று சென்னையில் பிரபல உணவகமான அஞ்சப்பர் ஓட்டலில் கேரட் அல்வாவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் ஹோட்டலை ஆய்வு செய்ததில் பழைய கிரில் சிக்கின் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அதனைக் கைப்பற்றிக் கெட்டுப்போன கிரில் சிக்கினை உணவு பாதுகாப்புத் துறையினர் அழித்தனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனி இது போன்ற தவறுகள் நடக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

kerala - snacks bar
சவுதி அரேபியா : 30 ஆண்டுகளாக கழிவறையில் தயாரிக்கப்பட்ட இந்திய உணவுகள் - ஆய்வில் அதிர்ச்சி

உணவகங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹோட்டல் நடத்தும் உரிமையாளர்கள் வெறு வணிக வியாபாரம் செய்யும் நோக்கமுடன் செயல்படாமல் தங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்குத் தரமான உணவுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் அசைவ பிரியர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com