நமது அண்டைய மாநிலமான கேரளாவுக்கு புதிய பெயர் சூட்டப்பட இருக்கிறது. கேரளாவின் முதலமைச்சர் பிணராயி விஜயன் இதற்கான மசோதாவை நேற்று சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.
கேரளா ஏன் தனது பெயரை மாற்றிக்கொள்ள விரும்புகிறது. கேரளாவுக்கு வைக்கப்படும் புதிய பெயர் என்ன? விரிவாக பார்க்கலாம்...
கேரள அரசு கேரளா என்பதிலிருந்து கேரளம் என மாநிலத்தின் பெயரை மாற்ற பரிந்துரைதுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிக்கள் 3ன் படி பெயர் மாற்றத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
மாநிலங்கள் உருவாக்கம், தற்போதுள்ள மாநிலங்களின் பகுதிகள், எல்லைகள் அல்லது பெயர்களில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வது தொடர்பான விவகாரங்கள் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 3ன் கீழ் வருகிறது.
இந்திய சுதந்திரத்தின் போது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஒட்டுமொத்த மலையாளம் பேசும் மக்களுக்காகவும் கேரளா உருவாக்கப்பட்டது. மலையாளத்தில் மாநிலத்துக்கு கேரளம் என்றே பெயரிடப்பட்டது.
ஆனால் அரசியலமைப்பின் முதல் அட்டவணையின் கீழ் கேரளா எனப் பதிவு செய்யப்பட்டது. ஆங்கிலம் முதலான எல்லா மொழிகளிலும் கேரளா என்பதிலிருந்து கேரளம் எனப் பெயர் மாற்றம் செய்ய இப்போது கேரள சட்டமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மசோதா சட்டமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிர்கட்சியும் எதிர்வினையாற்றவில்லை. ஒருமனதாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த ஜூலையில் மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கும் மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை பாங்களா என மாற்ற மத்திய அரசை நாடியுள்ளனர். பெங்காலி, ஆங்கிலம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பாங்களா என்றே அழைக்கப்படும்.
2011ம் ஆண்டில் ஒரிசா எனும் மாநிலத்தின் பெயரை ஒடிஷா என மாற்றினர். ஒரியா என்ற மொழியின் பெயரை ஒடியா என்றும் மாற்றினர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust