"Brother's Day கு விஷ் பண்ணல" பிளாக் செய்த தம்பிக்கு 434 மீட்டருக்கு கடிதம் எழுதிய சகோதரி

பிரதர்ஸ் டேவிற்கு தான் வாழ்த்து கூறாததால் மனமுடைந்து தன்னை பிளாக் செய்துவிட்ட தம்பியை சமாதானப்படுத்த கேரளாவை சேர்ந்த கிருஷ்ணபிரியா என்ற பெண் 434 மீட்டருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலில் ஒரே ஒரு A4 ஷீட்டில் துவங்கிய சமாதானக் கடிதம், எழுத நிறைய இருந்ததால், நீண்டு 434 மீட்டருக்கு நீண்டுவிட்டது.
Letters
LettersPexels
Published on

பெண்களுக்கு எப்படி அப்பாவின் இடத்தில் அண்ணன்களோ, அப்படி ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவின் இடத்தில் அக்காக்கள். தலையை பிடித்துக்கொண்டு சண்டை போட்டாலும் மூன்றாவது மனிதரிடம் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். ஆனால் இவர்களுக்குள் வரும் சண்டை உலகப்போரை மிஞ்சும்.

KrishnaPrasath-Krishnapriya
KrishnaPrasath-KrishnapriyaInstagram

அப்படி ஒரு அக்கா-தம்பிக்கு நடுவில் நடந்த சம்பவம் தான் இது. கடந்த மே மாதம் Brothers' Day அனுசரிக்கப்பட்டது. கேரளாவில் இடுக்கியை சேர்ந்த கிருஷ்ணபிரியா என்ற பெண் தனது தம்பிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. பல முறை ஃபோன் செய்தும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் தன் சகோதரியை தொடர்புகொள்ள கிருஷ்ணபிரசாத் முயற்சித்துள்ளார்.

ஆனால், வேலை மற்றும் பல காரணங்களுக்காக கிருஷ்ணபிரியா ஃபோனையும் எடுக்கவில்லை, அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் பதிலில்லை. மேலும் கிருஷ்ண பிரசாத் மற்றவர் எல்லாம் தனக்கு பிரதர்ஸ் டே விற்கு வாழ்த்து தெரிவித்ததை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்பியுள்ளார். அதற்கும் எந்த ரெஸ்பான்ஸும் வராமல் போகவே, கோபத்தில் தன் சகோதரியை பிளாக் செய்துவிட்டார் கிருஷ்ணபிரசாத்.

இதை தாமதமாக அறிந்த கிருஷ்ணபிரியா எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்து, தன் தம்பிக்கு கடிதம் எழுத நினைத்துள்ளார். முதலில் ஒரே ஒரு A4 ஷீட்டில் துவங்கிய சமாதான தூது, நீண்டுக்கொண்டே சென்றுள்ளது.

கடையில் பெரிய அளவு காகிதம் இல்லாததால், அங்கு கிடைத்த பில்லிங் பேப்பர் ரோலை வாங்கி வந்துள்ளார். 15 ரோல்களில் இருந்த காகிதங்கள் மொத்தத்திலும் தன் மனதில் இருந்தவற்றை கொட்டித்தீர்த்துள்ளார்.


"கடிதத்தை எழுதி முடித்த பிறகு அவற்றை சரியாக ஒன்றுசேர்த்து, அவற்றை பேக் செய்வது தான் சவாலாக இருந்தது"

மொத்தம் 5.27 கிலோ எடை இருந்த கடிதத்தொகுப்பு தன் தம்பி கிருஷ்ணபிரசாத்துக்கு பார்செல் செய்யப்பட்டது. முதலில் அதை தன் பிறந்தநாள் பரிசு என நினைத்த அவருக்கு, அது தன் சகோதரி எழுதிய கடிதம் என்று தெரிந்ததில் நெகிழ்ச்சி.


தற்போது இதுவரை எழுதப்பட்ட மிக நீண்ட கடிதத்தின் சாதனைக்காக அவர் கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பித்துள்ளார்.

Letters
Youtube ஷேர் செய்த நல்ல ராஜினாமா கடிதம் - இணையத்தில் வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com