இந்தியாவின் கடைசி டீக்கடை - எங்கு இருக்கிறது? இந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

பழமையான குடிசை வீடுகளில் வசுந்தரா நீர்வீழ்ச்சிகளை ரசித்துக் கொண்டே ஒரு நாள் முழுவதையும் இங்கு செலவிடலாம்.
Mana - the 'last village of India'
Mana - the 'last village of India'Twittter
Published on

இந்தியாவின் எல்லை குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இந்தியாவின் கடைசி கிராமம் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.?

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது தான் இந்த மானா கிராமம்.

இந்தியா சீனா எல்லையில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உத்தரகாண்டின் மானா இந்தியாவின் கடைசி கிராமம் என்று அறியப்படுகிறது.

இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 3,219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அந்தப் பகுதிக்குச் சென்றதும், அங்கு இருக்கும் கடைகளின் பெயர்கள், 'India's Last Tea Corner' and 'India's Last Coffee and Toffee Corner', இது தான் நாட்டின் கடைசி கிராமம் என்று சொல்லாமல் சொல்லிவிடும்.

பத்ரிநாத்திலிருந்து சுமார் மூன்று கிமீ தொலைவில், சாமோலி மாவட்டத்தில் சரஸ்வதி நதிக்கரையில் மானா கிராமம் அமைந்துள்ளது.

மானா கிராமம் எதற்கு பிரபலமானது?

பழமையான குடிசை வீடுகளில் வசுந்தரா நீர்வீழ்ச்சிகளை ரசித்துக் கொண்டே ஒரு நாள் முழுவதையும் இங்கு செலவிடலாம்.

அதுபோக ஐந்து பாண்டவர்களில் ஒருவரான பீமனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் 'பீமா புல்' என்ற கல் பாலமும் இங்கு உள்ளது.

பாண்டவர்கள் தங்கள் இறுதிப் பயணத்தின் போது மானா கிராமத்தின் வழியாகச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

Mana - the 'last village of India'
420 மனிதர்கள், 24 கோயில், செருப்பு அணியாத கால்கள்: கொடைக்கானல் அருகே ஓர் ஆச்சர்ய கிராமம்

மேலும், சுற்றுலாப் பயணிகள் 'வியாஸ் குஹா' என்ற சிறிய குகையையும் பார்வையிடலாம். இந்த குகையில் இருந்தப்படி தான் வேத வியாசர் 'மகாபாரதம்' எழுதியதாக பரவலாக நம்பப்படுகிறது.

'கடைசி டீ ஸ்டாலில்' இந்திய தேநீரின் சுவையை அனுபவித்துக்கொள்ளலாம். ஆன்மிக பயணம் மேற்கொள்வோருக்கு மட்டுமல்லாமல் ட்ரெக்கிங் போன்ற சாகச பயணம் செய்வோருக்கும் ஏற்ற இடம் தான் இந்த மானா கிராமம்.

மானாவுக்கு எப்போது செல்லலாம்?

மே முதல் நவம்பர் தொடக்கம் வரை மானா கிராமத்திற்குச் செல்ல சிறந்த நேரம்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, நவம்பர் முதல் ஏப்ரல் வரை இப்பகுதிக்கு செல்ல முடியாது.

Mana - the 'last village of India'
செல்ஃபோன், டிவி நோ! 1.30 மணி நேரம் கேட்ஜட்களுக்கு Goodbye சொல்லும் ஒரு அடடே கிராமம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com