குஞ்சிகல் நீர்வீழ்ச்சி: இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பற்றி தெரியுமா?

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் வாராஹி நதியால் இந்த நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டது. இந்த நீர்வீழ்ச்சி கீழே விழுவதற்கு முன் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக பாய்கிறது.
Kunchikal Waterfalls: Interesting facts about the tallest waterfall in India
Kunchikal Waterfalls: Interesting facts about the tallest waterfall in IndiaTwitter

குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான இயற்கை அதிசயமாகும். இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாக இருந்தாலும், அதன் அழகைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை, அது இன்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மறைக்கப்பட்ட ரத்தினமாக உள்ளது.

இந்த நீர்வீழ்ச்சியைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கர்நாடகாவில் உள்ள குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். 1493 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் இந்த நீர்வீழ்ச்சி இயற்கை ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

இந்த அழகிய நீர்வீழ்ச்சி, கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள மஸ்திகட்டே கிராமத்திற்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் வாராஹி நதியால் இந்த நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டது. இந்த நீர்வீழ்ச்சி கீழே விழுவதற்கு முன் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக பாய்கிறது

அருவி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் இருப்பதால், இதனை பார்வையிட அனுமதி பெறவேண்டியது அவசியமாகும். இந்த நீர்வீழ்ச்சி இன்னும் வணிகமயமாக்கலில் இருந்து விலகியிருக்கிறது.

Kunchikal Waterfalls: Interesting facts about the tallest waterfall in India
தாய்லாந்து: நீர்வீழ்ச்சி வழியாக மேலே ஏறலாம் - ‘ஒட்டும் அருவி’ பற்றி தெரியுமா?

நீர்வீழ்ச்சிகள் இந்த இடத்தின் இயற்கை அழகையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க உதவுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அழிந்துவரும் உயிரினங்களை காணலாம்.

நீர்வீழ்ச்சியின் ஓட்டம் பருவங்களுக்கு ஏற்ப மாறுபடும். மழைக்காலத்தில் நீர்வீழ்ச்சி முற்றிலும் கண்கவர் காட்சியளிக்கும் என்பதால் இந்த நேரம் சிறந்ததாக கருதப்படுகிறது.

குஞ்சிகல் அருவியிலிருந்து 138 கி.மீ தொலைவில் மங்களூர் விமான நிலையம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kunchikal Waterfalls: Interesting facts about the tallest waterfall in India
குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி: மதுரையில் இருக்கும் 'மினி குற்றாலம்’ பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com