குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி: மதுரையில் இருக்கும் 'மினி குற்றாலம்’ பற்றி தெரியுமா?

காட்டுக்கு மத்தியில் அருவியின் தண்ணீர் சத்தம் மட்டும் ஒலிக்க அப்படியே இயற்கையின் அமைதியில் மூழ்கிவிடுவீர்கள். வசீகரிக்கும் காட்சிகளை ரசித்துவிட்டு தண்ணீரின் ஓரத்தில் அமர்ந்து, அமைதியை அனுபவிக்கலாம்.
குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி: மதுரையில் இருக்கும் 'மினி குற்றாலம்’ பற்றி தெரியுமா?
குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி: மதுரையில் இருக்கும் 'மினி குற்றாலம்’ பற்றி தெரியுமா? Twitter
Published on

மதுரைக்கு அருகிலுள்ள சோழவந்தா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி. இயற்கை எழில் கொஞ்சும் அழகை மறைத்து வைத்திருக்கும் இந்த அருவி மதுரையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறி வருகிறது.

மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் இந்த அழகான இடத்திற்கு பயணம் செல்ல விரும்புகிறீர்களா?

நிச்சயம் குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி சரியான தேர்வாக இருக்கும்.

காட்டுக்கு மத்தியில் அருவியின் தண்ணீர் சத்தம் மட்டும் ஒலிக்க அப்படியே இயற்கையின் அமைதியில் மூழ்கிவிடுவீர்கள். வசீகரிக்கும் காட்சிகளை ரசித்துவிட்டு தண்ணீரின் ஓரத்தில் அமர்ந்து, அமைதியை அனுபவிக்கலாம்.

மலையேற்றம் செய்ய விரும்புவர்களுக்கும் இந்த இடம் சிறந்த இடமாகும். மலையேறுபவர்களின் வசதிக்காக இந்த அருவிக்கு 2 கி.மீ மலையேற்றம் செய்யலாம்.

சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும்.

குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி: மதுரையில் இருக்கும் 'மினி குற்றாலம்’ பற்றி தெரியுமா?
பெரம்பலூரில் இப்படி ஒரு அருவியா? காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோரையாறு குறித்து தெரியுமா?

இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு நீங்கள் செல்லலாம். மதுரை நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்தை நீங்கள் நிச்சயம் பார்வையிடலாம். மதுரைவாசிகள் தங்கள் வார இறுதி நாட்களை நீர்வீழ்ச்சியில் கழிப்பார்கள்.

மதுரையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாகப் பேருந்து மூலம் செல்லலாம் .

சுற்றுலாப் பயணிகள் வாடிப்பட்டி வழியாகவும் வரலாம், இந்த நீர்வீழ்ச்சி வாடிப்பட்டியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மினி பேருந்து சேவைகள் உள்ளன.

குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி: மதுரையில் இருக்கும் 'மினி குற்றாலம்’ பற்றி தெரியுமா?
மதுரை : 7 மலைகள், 70 ஏரிகளை கொண்ட இந்த கிராமத்தை பற்றி தெரியுமா? அடடே தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com