குவைத், ஏமன், லெபனான் போர் : கடந்தகாலப் போர்களில் இந்தியர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் ?

உக்ரைன் போர் துவங்கிய போது பிரதமர் மோடி உத்திரப் பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது ஆபரேஷன் கங்கை எனும் பெயரில் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
போர்

போர்

NewsSense

Published on

சுமார் 4000 இந்தியர்கள் அதிலும் அதிகம் பேர் மருத்துவக் கல்வி மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மாட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் கிழக்கு மற்றும் வட கிழக்கு உக்ரைன் பகுதிகளில் சிக்கியிருக்கிறார்கள். இப்பகுதிக் ரசிய எல்லைக்கு அருகே உள்ளன. இவர்கள் மீட்டுக் கொண்டு வர இந்திய அரசு திணறுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

உக்ரைன் போர் துவங்கிய போது பிரதமர் மோடி உத்திரப் பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது ஆபரேஷன் கங்கை எனும் பெயரில் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசும் தமிழ் மாணவர்களை மீட்பதற்கு தனியாக ஒரு குழுவை நியமித்திருக்கிறது.

உக்ரைனில் இருந்து வந்திறங்கிய ஒரு சில நூறு மாணவர்களை வைத்து பாஜக அரசு விளம்பரம் தேடிக்கொண்டதைத் தாண்டி உண்மையில் பெரும்பாலான மாணவர்கள் மீட்க திணறி வருகிறது. ரசியா தொடுத்துள்ள போரில் இந்திய அரசு நடுநிலைமை வகிப்பதாலும் இந்தப் பிரச்சினை சிக்கலாக மாறி வருகிறது.

வியாழக்கிழமை பேசிய ரசிய அதிபர் புடின் சுமார் 3000 இந்திய மாணவர்கள் கார்கிவ் நகரின் ரயில் நிலையத்தில் சிக்கியிருப்பதாக பேசியிருக்கிறார். மேலும் இந்திய மாணவர்களை உக்ரைன் இராணுவம் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கடந்த காலங்களிலும் இது போன்று நிறைய போர்களில் இந்திய மக்கள் வெளிநாடுகளில் மாட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.

1990 குவைத் போர்

1990 குவைத் போர்

Facebook

NewsSense

1990 குவைத் போர்

வளைகுடாவில் இருக்கும் குவைத் மீது ஈராக் படையெடுக்க பின்னர் குவைத்தை மீட்க அமெரிக்கா படையடுத்தது. 1990 ஆம் ஆண்டின் ஆகஸ்டு முதல் அக்டோபர் மாதம் வரை ஈராக் ஆக்கிரமிப்பில் இருந்த குவைத்தில் 1,70,000 இந்திய மக்கள் ஏர் இந்தியா மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அப்போது வி.பி.சிங் பிரதமராக இருந்தார். அவரது கூட்டணி அரசு சார்பில் ஐ.கே.குஜ்ரால் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அவர் ஈராக் அதிபர் சதாம் ஹூசேனேடு பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரம்மாண்டமான நடவடிக்கையை செய்து காட்டினார். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவாகியிருக்கிறது. குவைத்திலிருந்து ஜோர்டானில் இருக்கும் அம்மான் வழியாக மும்பைக்கு சுமார் 4117 கிமீட்டர் தூரத்தில் ஏர் இந்தியா விமானங்கள் சென்று வந்தன. 63 நாட்களில் மொத்தம் 488 முறை ஏர் இந்தியா விமானங்கள் இந்தமீட்பு நடவடிக்கைக்காக பறந்தன.

போர்

Ukraine Russia War : பூனைக்குட்டியுடன் தாயகம் திரும்பிய தர்மபுரி மாணவர்

2006 ஆபரேஷன் சூகூன்

2006 ஆபரேஷன் சூகூன்

Facebook

2006 ஆபரேஷன் சூகூன்

2006 ஆம் ஆண்டின் லெபனான் போரின் போது இந்தியக் கடற்படையும், ஏர் இந்தியாவும் இணைந்து லெபனானில் சிக்கியிருந்த இந்திய மக்களை மீட்டுக் கொண்டு வந்தனர். அப்போது காங்கிரசு கூட்டணி ஆட்சியில் இருந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இந்த மீட்பில் இந்திய மக்கள் மட்டுமல்ல இலங்கை மக்கள், நேபாளிகள், இந்தியர்களோடு மண உறவு கொண்டிருந்த லெபனான் மக்கள் அனைவரும் மீடக்பட்டனர். சூயஸ் கால்வாய் வழியாக பயணித்த இந்தியக் கப்பற்படை கப்பல்கள் மத்தியத் தரைக்கடல் பகுதியில் அவர்களை மீட்டு சைப்ரஸ் நாட்டிற்கு கொண்டு சென்று அங்கிருந்து ஏர் இந்தியா அவர்களை நாட்டிற்கு மீட்டு அழைத்து வந்தது. 1764 இந்தியர்களை உள்ளிட்டு மொத்தம் 2,280 மக்கள் மீட்கப்பட்டனர்.

2011 Lybia War

2011 Lybia War

Twitter

2011 ஆபரேஷன் சேஃப் ஹோம் கம்மிங் - பாதுகாப்பாக நாடு திரும்பும் நடவடிக்கை

2011 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் லிபியாவின் சர்வாதிகாரி கடாஃபியை எதிர்த்து உள்நாட்டு போர் துவங்கியது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடாஃபி எதிர்ப்பாரளர்களை ஆதரித்தன. அப்போது 18,000 இந்திய மக்கள் லிபியாவில் இருந்தனர். லிபியாவின் தலைநகரம் திரிபோலியில் இருக்கும் விமான நிலையப் பாதை போரினால் சேதமடைந்திருந்ததால் மீட்பு நடவடிக்கைகள் சிக்கலாக இருந்தன. அப்போது இந்தியக் கப்பற்படைகள் லிபியாவின் துறைமுகமான பெங்காசியில் இந்திய மக்களை வரவழைத்து எகிப்தின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் இறக்கின. அங்கிருந்து ஏர் இந்தியா அவர்கள் அழைத்துக் கொண்டு தாயகம் திரும்பியது. இந்தப் பயணத்திற்காக இந்திய அரசு மக்களிடம் கட்டணம் வாங்காமல் இலவசமாக சேவை செய்தது. மொத்தம் 15,000 இந்திய மக்கள் மீட்கப்பட்டனர். 3000 பேர் லிபியாவிலேயே தங்கும் முடிவை எடுத்தனர்.

2015 Yeman Operation

2015 Yeman Operation

Twitter

2015 ஆபரேஷன் ராஹெத் - ஏமன் மீட்பு நடவடிக்கை

2015 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவும் அதன் கூட்டணி நாடுகளும் ஏமன் நாட்டை தாக்கின. இதிலும் கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் பணியில் ஈடுபட்டன. மொத்தம் 4,960 இந்திய மக்களும் 41 நாடுகளைச் சேர்ந்த 960 மக்களும் மீட்கப்பட்டனர். பாகிஸ்தான் கடற்படை கப்பல் மூலம் 11 இந்தியர்கள் மீட்கப்பட்டு கராச்சி வந்து அங்கிருந்து இந்தியா திரும்பினர். இந்த ஆண்டில் மோடி தலைமையில் பாஜக அரசு ஆட்சியில் இருந்தது.

2016 ஆபரேஷன் சங்கத் மோச்சன்

2016 ஆபரேஷன் சங்கத் மோச்சன்

Facebook

2016 ஆபரேஷன் சங்கத் மோச்சன் - தெற்கு சூடான்

ஆப்பிரிக்காவின் தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் 2016 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது 600 இந்தியர்கள் அந்நாட்டில் இருந்தனர். அவர்களின் 143 பேர்கள் மட்டும் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.

2021 ஆபரேஷன் தேவி சக்தி

2021 ஆபரேஷன் தேவி சக்தி

Facebook

2021 ஆபரேஷன் தேவி சக்தி - ஆப்கானிஸ்தான்

மே 1, 2021 இல் ஆப்கானை விட்டு அமெரிக்க படைகள் விலகியதும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் போரில் இறங்கினர். மொத்தம் 373 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதிலும் ஏர் இந்தியா விமானப்படைகள் பணியாற்றின. மீட்கப்பட்டவர்களில் ஆப்கானிய குடிமக்களாக இருந்த சீக்கியர்களும், இந்துக்களும் கூட உண்டு.

Operation Ganga

Operation Ganga

Twitter

முடிவாக

உக்ரைன் எல்லையில் ரசிய துருப்புகள் சில வாரங்களாக நிலை கொண்டபோது போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்று பல நாடுகள் கூறின. ஆனால் அப்போது உக்ரைனில் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள், அவர்களை தூதரகத்தின் மூலம் எப்படி மீட்டு அழைத்து வருவது என்பதை இந்திய அரசு யோசிக்கவே இல்லை. போர் துவங்கிய பிறகே அவசரமாக விழித்துக் கொண்டு மீட்பு பணியை துவங்கியது. அதற்குள் போர் தீவிரமடைந்ததால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எப்போது எப்படி தாயகம் திரும்புவார்கள் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்புவது நியாயமானதே!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com