லக்ஷ்மி மிட்டல் : உலோகத்தால் உலகை ஆளும் இந்தியரின் கதை - வியக்க வைக்கும் தகவல்

உலகிலுள்ள எல்லா டாப் பணக்காரர்களைப் போல இவரது சொத்து மதிப்பும் தன் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருப்பதால்தான் வருகிறது. ஆர்சிலர் மிட்டல் என்கிற நிறுவனத்தில், லக்ஷ்மி மிட்டலுக்கு சுமார் 36 சதவீத பங்குகள் உள்ளது
Lakshmi Mittal
Lakshmi MittalTwitter
Published on

லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் பிரிட்டனின் ஆறாவது பெரிய பணக்காரராக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் கடந்த மாதம் பட்டியலிடப்பட்டார்.


2021ஆம் ஆண்டு அதே பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தார். கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஆர்சிலர் மிட்டல் ஸ்டீல்வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலமாக, லக்ஷ்மி மிட்டல் கிட்டத்தட்ட 2.3 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் சொத்தைச் சேர்த்துள்ளார் என்கிறது பிடிஐ முகமை.

Arcelor Mittal
Arcelor MittalTwitter

ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் வலைதள தரவுகள் படி தற்போது லக்ஷ்மி மிட்டலின் சொத்து மதிப்பு சுமார் 17.8 பில்லியன் டாலர்.

ஜூன் 15ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் லக்ஷ்மி மிட்டல் எப்படி இத்தனை பெரிய பணக்காரர் ஆனார்? ஒரு காலத்தில் உலகின் டாப் ஐந்து பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர், இப்போது பின்னுக்குச் சென்றது ஏன்? வாருங்கள் பார்ப்போம்.

Lakshmi Mittal
Lakshmi MittalTwitter

ஒரு ஸ்டீல் சாம்ராஜ்ஜியத்தின் உதயம்:


உலகிலுள்ள எல்லா டாப் பணக்காரர்களைப் போல இவரது சொத்து மதிப்பும் தன் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருப்பதால்தான் வருகிறது. ஆர்சிலர் மிட்டல் என்கிற நிறுவனத்தில், லக்ஷ்மி மிட்டலுக்கு சுமார் 36 சதவீத பங்குகள் இருப்பதாகக் கூறுகிறது சி என் பி சி டிவி18 வலைதளம்.

2020ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்டீல் உற்பத்தி அடிப்படையில், உலகிலேயே மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர் பட்டியலில் இரண்டாவது இடம் ஆர்சிலர் மிட்டல் ஸ்டீல் நிறுவனத்துக்கு தான்.

மிகப் பெரிய பங்குதாரர் என்பதைத் தாண்டி, தன் 72 வயதிலும் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் செயல் தலைவராக தொடர்ந்து கொண்டிருக்கிறார் லக்ஷ்மி மிட்டல். சமீபத்தில்தான் தன் முதன்மைச் செயல் அதிகாரி பொறுப்பை தன் மகன் ஆதித்யா மிட்டலிடம் கொடுத்தார்.

Adithya Mittal
Adithya MittalTwitter

1950ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த லக்ஷ்மி மிட்டல், 26 வயதிலேயே இந்தோனேசியாவில் தன் முதல் ஸ்டீல் ஆலையை 1976ஆம் ஆண்டு தொடங்கினார்.


உலகளவில் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பல ஸ்டீல் ஆலைகள் மற்றும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, அதை லாபத்தில் ஓட வைக்கும் திறமைதான் இவரை உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கச் செய்தது.


2004ஆம் ஆண்டு தன் இஸ்பத் இண்டர்நேஷனல் மற்றும் எல் என் எம் ஹோல்டிங்க்ஸ் என்கிற நிறுவனத்தை இணைத்து மிட்டல் ஸ்டீல் என்கிற நிறுவனத்தை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து 4.7 பில்லியன் டாலர் செலவழித்து வில்பர் ராஸ் இண்டர்நேஷனல் ஸ்டீல் குழுமத்தை வாங்கினார்.


2006ஆம் ஆண்டு மித்தல் ஸ்டீல், லக்செம்பார்கைச் சேர்ந்த ஆர்சிலர் என்கிற நிறுவனத்தைக் கைப்பற்றி, உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர் என்கிற பெருமையை எட்டிப் பிடித்தது.

Arcelor Mittal
Arcelor MittalTwitter

தற்போதைய நிலை என்ன?


லக்ஷ்மி மிட்டல் 2005ஆம் ஆண்டு சுமார் 25 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு உலகின் 3ஆவது பெரிய பணக்காரர் என ஃபோர்ப்ஸ் நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டவர், தற்போது உலகின் 89ஆவது பெரிய பணக்காரராக் இருக்கிறார்.


2010 காலகட்டத்திலிருந்து மெல்ல தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த பணக்காரர்கள் உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். இரும்பு, கச்சா எண்ணெய், ஆட்டோமொபைல் போன்ற பாரம்பரியத் தொழில் செய்பவர்கள் இயற்கையாகவே பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.

Lakshmi Mittal
Lakshmi Mittal

அது போக, இரும்பு, ஸ்டீல் போன்ற உலோகங்களின் சர்வதேச விலை மாற்றம் ஒரு முக்கிய காரணம். ஆனால் அதை எல்லாம் தாண்டி லக்ஷ்மி மிட்டல் சொகுசு வாழ்கையை மிகுந்த ஆசையோடு வாழக்கூடிய நபர் என்பதால் செலவு கணக்கு நீண்டது.

கடந்த 1995ஆம் ஆண்டு முதல் லண்டனில் வாழும் இவர், சுமார் 350 மில்லியன் டாலர் அளவுக்கு சொகுசு பங்களாக்களை வாங்கி வைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியாவில் இன்று அம்பானி குடும்பம் செய்யும் ஆடம்பர திருமணத்துக்கு எல்லாம் முன்னோடி இவர்தான். 2004ஆம் ஆண்டு இவரது மகள் வினிஷாவின் திருமணத்தில் ஷாரூக் கான், ஜூஹி சாவ்லா, சைஃப் அலி கான் என பலரையும் பாட்டு பாடி, நடனமாட வைத்தார் லக்ஷ்மி மிட்டல்.

Lakshmi Mittal
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?

இந்தி சினிமாவின் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் திருமண தம்பதிகளுக்கென நாடகம் எல்லாம் எழுதியதாக சி என் பி சி வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த திருமணம் உலக அளவில் நடைபெற்ற ஆடம்பர திருமணங்களில் ஒன்று என சில வலைதளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.


சொகுசு கார்கள், சொகுசுக் கப்பல்களைத் தாண்டி, தனி சொகுசு விமானத்தையும் வைத்துள்ளார் லக்ஷ்மி மிட்டல். இரண்டு லட்சம் பவுண்ட் மதிப்புள்ள டைம்லர் மேபேக் காரும் இப்பட்டியலில் அடக்கம். இப்படி சொத்தை வாரி இறைத்தால் நிகர சொத்து மதிப்பு குறையத்தானே செய்யும்.

Lakshmi Mittal
Lakshmi Mittal

கைகொடுத்த காலம்:


முன்பே கூறியது போல கடந்த சில ஆண்டுகளாக ஸ்டீலின் விலை சர்வதேச அளவில் தொடர்ந்து சரிந்து வந்தது. அதனால் 2020ஆம் ஆண்டு ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் 733 மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்டமாகக் காட்டியது. அடுத்த 2021ஆம் ஆண்டே அந்நிறுவனம் 15 பில்லியன் அமெரிக்க டாலரை நிகர வருமானமாகக் காட்டியது. காரணம் ஸ்டீலின் விலை உயர்வு.


கடந்த 2020ஆம் ஆண்டு வெறும் 7.4 பில்லியன் டாலராக இருந்த லக்ஷ்மி மிட்டலின் சொத்து மதிப்பு தற்போது 2022ஆம் ஆண்டு 17.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.


விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும் என்பதற்கு லக்ஷ்மி மிட்டல் ஒரு சிறந்த உதாரணம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிட்டல்ஜி.

Lakshmi Mittal
உலக சூப்பர் பணக்காரர் அதானி : எலான் மஸ்க் சொத்தை விட இந்த இந்தியரின் சொத்து அதிகம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com