LEO: சிங்கத்தை விட புத்திசாலிகளா? விஜய் படத்தில் இடம்பெற்ற Hyena - சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகர் விஜய் இந்த ஹைனாவுடன் போரிடுவது போலான போஸ்டர் மற்றும், ட்ரெயிலரில் காட்சி ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
LEO: விஜய் படத்தில் இடம்பெற்ற Hyena பற்றி தெரியுமா? சுவாரஸ்ய தகவல்கள்!
LEO: விஜய் படத்தில் இடம்பெற்ற Hyena பற்றி தெரியுமா? சுவாரஸ்ய தகவல்கள்!Canva
Published on

ஹைனா. இந்த வார்த்தையை கடந்த சில நாட்களாக நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.

இதற்கு காரணம், நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் இந்த ஹைனா என்ற விலங்கும் இருப்பது தான்.

இதனை தமிழில் கழுதைப்புலி என்று அழைக்கின்றனர்.

நடிகர் விஜய் இந்த ஹைனாவுடன் சண்டியிடுவது போலான காட்சி போஸ்டர் மற்றும், ட்ரெயிலரில் இடம்பெற்றிருந்தது.

இந்த ஹைனா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

வேட்டை திறன்

ஹைனாக்கள் வேட்டையாடுவதில்லை, அவை மற்ற காட்டு விலங்குகளின் உணவை திருடி சாப்பிடும் என்று கூற்று உள்ளது. ஆனால் அது முற்றிலும் உண்மையல்ல. ஹைனாக்கள் 66 முதல் 90 சதவிகித வேட்டை திறன் கொண்டுள்ளன.

ஹைனாக்களை scavengers of the jungle என்று அழைக்கிறோம். இதற்கு முக்கிய காரணம், இந்த உயிரினங்கள் மற்ற விலங்குகள் சாப்பிட்டு மீதம் வைத்த உடற்பாகங்கள், எலும்புகள் போன்றவற்றை உண்ணும்.

இதனால் ஹைனாக்களின் உடல்பாகங்கள் மிகவும் வலுவானதாக உள்ளன.

வகைகள்

ஹைனாக்களில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன.

  • Spotted Hyenas

  • Striped Hyenas

  • Grey Hyenas

  • Hard-wolf Hyenas

ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆசியா போன்ற பகுதிகளில் இந்த கழுதைப்புலிகள் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் வரிகல் கொண்ட கழுதைப்புலிகள் இருக்கின்றன. தமிழகத்திலும் கூட இருக்கிறது.

கழுதை புலிகளின் உருவம் ஏறுமுகமாக இருக்கிறது. இதன் முன்னங்கால்கள் நீளமாகவும், பின்னங்கால்கள் சிறியதாக இருக்கின்றன

Alpha Female

ஹைனாக்களின் குழுவில் தலைவனாக ஒரு பெண் ஹைனா தான் இருக்கிறது. இதன் கட்டுப்பாட்டில் தான் அந்தந்த ஹைனாக்கள் குழு செயல்படும்.

இது புள்ளிகள் கொண்ட ஹைனாக்களில் காணப்படும் குணாதிசியமாகும். இந்த தலைவர் பொறுப்பில் இருக்கும் ஹைனாவுக்கு முதலில் உணவு கிடைப்பது முதல், எந்த ஆண் ஹைனாவுடன் உறவு கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரமும் இருக்கிறது.

அதே சமயத்தில், ஆண் ஹைனாக்கள் தனது குழுவில் ஒரு பெண் ஹைனாவுடன் மட்டுமே பாலுறவு கொள்ளும். அப்படி வேறு ஒரு பெண் ஹைனாவுடன் உறவு கொள்வதென்றால் அது வேறு குழுவின் ஹைனாவாக இருக்கும்.

மேலும் ஆண் ஹைனாக்களை விட, பெண் ஹைனாக்கள் பெரியதாகவும், வலுவானதாகவும் இருக்கின்றன.

புத்திக் கூர்மை

ஹைனாக்கள் மற்ற காட்டு விலங்குகளை ஒப்பிடும்போது அதிக புத்திக் கூர்மை உடையவை. இவை ஒரு குழுவாக சேர்ந்து வாழ்வதால் நிறைய விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றன. மேலும் சமூகமாக சேர்ந்து வேட்டையில் ஈடுபடும்போது, தங்களின் எதிரியை தந்திரமாக ஏமாற்றக்கூடியவை.

பொதுவாக சிங்கத்துக்கும் கழுதைப்புலிக்கும் தான் காட்டில் சண்டையே நடைபெறும். சிங்கங்கள் உருவத்தில் பெரியதாக இருந்தாலும் கழுதைப்புலிகள் அதிக புத்திக்கூர்மையுடன் செயல்படும்.

ஹைனாக்கள் சிரிக்குமா?

ஹைனாக்கள் மனிதர்களை போல சிரிக்கும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். இது உண்மையில் சிரிப்பு அல்ல, அவை எழுப்பும் ஒரு வித ஒலி, மனிதர்கள் குலுங்கி சிரிப்பது போல இருக்கும்.

இது பிரத்தியேகமாக ஸ்பாட்டட் ஹைனாக்களில் காணமுடிகிறது. அச்சம், பதற்றம் போன்ற உணர்வை ஒரு ஹைனா வெளிப்படுத்தும்போது, இந்த மாதிரியான ஒலி உருவாகிறது.

இதை தவிர ஹைனாக்களிடம் வூப்பிங் என்ற ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, தனித்தனியாக ஹைனாக்களுக்கு இருக்கும் அடையாளம் அல்லது பெயர் எனலாம். குறிப்பிட்ட ஹைனாவை அழைக்க இந்த ஒலிகளை மற்ற ஹைனாக்கள் பயன்படுத்துகின்றன.

LEO: விஜய் படத்தில் இடம்பெற்ற Hyena பற்றி தெரியுமா? சுவாரஸ்ய தகவல்கள்!
அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய இந்த ஐந்து ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

ஹைனாக்களின் மற்ற சில குணங்கள்

  • நாக்டர்னல் (இரவில் விழிக்க, வேட்டையாடக் கூடிய) உயிரினம்.

  • மாமிசம் அல்லாது, பழங்களை கூட உண்ணும்

  • சிறந்த நண்பனாக விளங்கும்.

  • அதிக ஞாபக சக்தி உள்ளதால், வஞ்சம் வைத்து பழிவாங்கும் உயிரினம்.

  • ஆண் ஹைனாக்கள் தான் கடைசியாக சாப்பிடும்.

LEO: விஜய் படத்தில் இடம்பெற்ற Hyena பற்றி தெரியுமா? சுவாரஸ்ய தகவல்கள்!
ஆமை போல நிதானம்; அணில் போல சுறுசுறுப்பு - சந்தோஷமாக இருக்க 10 டிப்ஸ் இதான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com