ஆமை போல நிதானம்; அணில் போல சுறுசுறுப்பு - சந்தோஷமாக இருக்க 10 டிப்ஸ் இதான்!

மகிழ்ச்சி எனப்படும் உணர்வை பொருளாக்கம் செய்துவிடுகிறோம். ஆனால் உண்மையில் அதனை நமக்குள் தான் தேடி கண்டெடுக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க 10 டிப்ஸ் இதோ!
ஆமை போல நிதானம்; அணில் போல சுறுசுறுப்பு - சந்தோஷமாக இருக்க 10 டிப்ஸ் இதான்!
ஆமை போல நிதானம்; அணில் போல சுறுசுறுப்பு - சந்தோஷமாக இருக்க 10 டிப்ஸ் இதான்!canva
Published on

சிலருக்கு நிறைய பணம் இருந்தால் சந்தோஷம், சிலருக்கு பொருட்களை சேகரிப்பதில் சந்தோஷம்.

இப்படியாக ஒரு பொருளின் மீதே நாம் நம் மகிழ்ச்சியின் அளவுகோலை வைக்கிறோம். அல்லது மகிழ்ச்சி எனப்படும் உணர்வை பொருளாக்கம் செய்துவிடுகிறோம்.

ஆனால் உண்மையில் அதனை நமக்குள் தான் தேடி கண்டெடுக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க 10 டிப்ஸ் இதோ!

நிதானமாக இருங்கள்

எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்வதை கற்றுக்கொள்ள வேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்தாலே பாதி குழப்பம் விலகிவிடும். சிந்தித்து தெளிவான முடிவை எடுக்க அது உதவும்..

Slow And Steady wins the race கதை நினைவிருக்கிறதா?

(ஆமையாக இருங்கள்)

ஆமை போல நிதானம்; அணில் போல சுறுசுறுப்பு - சந்தோஷமாக இருக்க 10 டிப்ஸ் இதான்!
ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!

நிறைவாக சாப்பிடவேண்டாம்

எப்போதும் வயிறு நிறைய சாப்பிடக் கூடாதாம். ஜப்பனிய வழக்கம் ஒன்று இருக்கிறது. ஹரா ஹச்சி பூ என்று அதனை அழைக்கின்றனர். Stomach Eight parts full என்று பொருள்படுகிறது.

அதாவது, முக்கால் வயிறு சாப்பிடுவது. அப்படி வயிறு நிறைய சாப்பிடாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை

எப்போதும் ஆக்டிவாக இருங்கள்

எந்த தருணத்திலும் நமக்கு பிடித்த விஷயத்தை செய்ய சலித்துக்கொள்ள கூடாது, துவண்டுவிடக் கூடாது. நம்மை சந்தோஷப்படுத்தும் வீலைகளையே செய்யாமல் போனால், வாழ்க்கையின் அர்த்தத்தையே இழக்க நேர்ந்துவிடும்.

(அணில் போல இருங்கள்)

ஆமை போல நிதானம்; அணில் போல சுறுசுறுப்பு - சந்தோஷமாக இருக்க 10 டிப்ஸ் இதான்!
அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய இந்த ஐந்து ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

நல்ல மனிதர்களை தேர்ந்தெடுப்பது

நம் மனது நிம்மதியாக இருக்க நம்மை சுற்றி நல்ல மனிதர்கள் இருப்பது அவசியம். எப்போதும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருந்தாலோ, அல்லது நெகட்டிவ் ஆக பேசிக்கொண்டிருந்தலோ நம்மை நாம் இழந்துவிடுவோம்

அதனால், குட் வைப்ஸ் ஒன்லி!!

உடற்பயிற்சி செய்யலாம்

எக்சர்சைஸ் செய்வதால், புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும் இருக்கலாம். சந்தோஷத்துக்கான ஹார்மோன்கள் உடற்பயிற்சி செய்வதால் சுரக்கிறது. இதனால் நாம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம்

இயற்கை

என்னதான் நம்மைச் சுற்றி மனிதர்கள் இருந்தாலும், கொஞ்சம் இயற்கையுடனும் கைக் குலுக்குவது அவசியம். மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தான். நாம் தேடும் அமைதியை தரவல்லது இயற்கை

கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ்!

எப்போதும் கூட வேண்டாம், ஆனால் முடிந்த அளவு சிரியுங்கள். எதிர் இருப்பவரை பார்த்து ஒரு சின்ன புன்னகை சிந்துங்கள். இது அவர்களையும் ஒரு நொடி ரிலாக்ஸ் ஆக்கும். நீங்களும் பீஸ்ஃபுல் ஆக உணர்வீர்கள்

ஆமை போல நிதானம்; அணில் போல சுறுசுறுப்பு - சந்தோஷமாக இருக்க 10 டிப்ஸ் இதான்!
இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? மனிதர்களின் 7 self destructive habits

லிவ் இன் தி மொமன்ட்

"அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கைங்க, முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்கள சந்தோஷப்படுத்திட்டு போகலாம்" என்று தளபதி விஜய் சொன்னது ஞாபகம் இருக்கா? அது உண்மை தான் பாஸ்.

இந்த நிமிடம் நம்மிடம் தான் இருக்கிறது. அதனை அனுபவித்து வாழுங்கள். அடுத்து வருவதை அப்பறமா பாத்துக்கலாம்

தேங்க் யூ!

உங்கள் நாளை மகிழ்ச்சியாக்கும் எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் நன்றி சொல்லுங்கள். நன்றி மறப்பது நன்றன்று!!

இகிகை

ஜப்பானிய முறைப்படி, இகிகை என்பது நம்மை சந்தோஷப்படுத்தும் செயலை செய்வது எனக் கூறப்படுகிறது. உங்களை மகிழ்ச்சியாக வைக்கும், மன நிம்மதி தரும் செயலை எப்போதும் செய்யுங்கள்.

உங்களை மகிழ்விக்கும் செயல் எதுவென்று தெரியாவிட்டால், அதனை கண்டறியுங்கள். கண்டுபிடித்து வாழுங்கள். மகிழ்ச்சியின் சாவி எப்போதும் உங்கள் கையில் தான்

ஆமை போல நிதானம்; அணில் போல சுறுசுறுப்பு - சந்தோஷமாக இருக்க 10 டிப்ஸ் இதான்!
தனிமையில் இனிமை காண்பவரா நீங்கள்? தனிமை விரும்பிகளின் 7 குணங்கள் இது தான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com