காஷ்மீர் : 5.9 மில்லியன் டன் லித்தியம் - இந்தியாவின் பொருளாதாரமே வேற லெவலுக்கு மாறுமா?

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரிதான லித்தியம் தாது, இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்திய அரசு தரப்பில் நேற்று (பிப்ரவரி 9ஆம் தேதி வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
காஷ்மீர் : 5.9 மில்லியன் டன் லித்தியம் - இந்தியாவின் பொருளாதாரமே வேற லெவலுக்கு மாறுமா?
காஷ்மீர் : 5.9 மில்லியன் டன் லித்தியம் - இந்தியாவின் பொருளாதாரமே வேற லெவலுக்கு மாறுமா?Newssensetn
Published on

இந்தியா போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த நாடுகளில், அதுவும் உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கும் ஒரு நாட்டில், இரும்பு, அலுமினியம்… போன்ற அடிப்படை உலோகங்கள் எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல லித்தியம் போன்ற உலகின் மிக அரிதான தாது பொருட்களும் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கும்,சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் அவசியமாகி வருகிறது.

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரிதான லித்தியம் தாது, இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்திய அரசு தரப்பில் நேற்று (பிப்ரவரி 9ஆம் தேதி வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Istock

5.9 மில்லியன் டன் லித்தியம்

ஜம்மு காஷ்மீரில் ரெசி (Reasi) மாவட்டத்தில், சலல் ஹைமனா (Salal Haimana) பகுதியில், கிட்டத்தட்ட 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, இந்திய சுரங்கத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா கூறியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஒரு சிறிய லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே லித்தியம் தாது பொருட்களுக்கான தேவை சர்வதேச அளவில் கணிசமாக அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பசுமை தீர்வுகளை நோக்கி உலக நாடுகள் நகரும் போது, பல்வேறு மின் சாதனங்கள், மின்சார வாகனங்கள் தீர்வாக வருகின்றன. குறிப்பாக மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் லித்தியம் தாதுப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இதுவரை ஆஸ்திரேலியா இனி காஷ்மீர்

இதுநாள் வரை இந்தியாவுக்கு தேவையான லித்தியம் தாதுப் பொருள் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது. தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் லித்தியம் இருப்புகளால், இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை 2030-ம் ஆண்டுக்குள் சுமார் 30 சதவீதம் அதிகரிக்க முடியும் என சில நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

2050ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் காலநிலை மாற்ற இலக்குகளை அடைய, லித்தியம் போன்ற அரிதான தாதுப் பொருட்கள் உற்பத்தி, தற்போது இருப்பதை விட சுமார் 500 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என உலக வங்கி தன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது.

காஷ்மீர் : 5.9 மில்லியன் டன் லித்தியம் - இந்தியாவின் பொருளாதாரமே வேற லெவலுக்கு மாறுமா?
எலான் மஸ்க்குக்கு செக் வைத்த ஒரு ஆப்ரிக்க தேசம் - செளதி ஆகுமா ஜிம்பாப்வே?
காஷ்மீர் : 5.9 மில்லியன் டன் லித்தியம் - இந்தியாவின் பொருளாதாரமே வேற லெவலுக்கு மாறுமா?
எல் டொராடோ எனும் தங்க நகரம் உண்மையில் இருந்ததா? - ஒரு சாகச பயணம்

என்ன சாபம்?

சரி இந்தியாவுக்கு இத்தனை பெரிய லித்தியம் இருப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் பொதுவாகவே லித்தியம் போன்ற அரிதான தாது பொருட்களை பூமியிலிருந்து எடுக்கும் போது, மிக அதிக அளவில் மரபுசார் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுமாம்.

இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு கணிசமாக அதிகரிக்கும் என பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக லித்தியம் தாதுப் பொருளை பூமியிலிருந்து எடுக்கும் போது மிக அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுமாம். குறிப்பாக லித்தியம் சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு வாயுவும் வளிமண்டலத்தில் கலக்கும்.

சமீபத்தில் கூட, லித்தியம் அதிகம் இருக்கும் அர்ஜென்டினா நாட்டில், அதிக அளவில் லித்தியம் சுரங்கத்திற்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாகவும் உள்ளூர் மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியானதும் இங்கு நினைவு கூறத்தக்கது. சூழலையும், மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பாதிக்காமல் லித்தியம் எடுக்க ஒரு புது வழிகண்டுபிடிக்கப்பட்டால் சரி.

Summary

Summary:

Lithium is a rare metal that is primarily obtained from minerals such as spodumene, petalite, and lepidolite, which are found in large deposits in countries like Australia, Chile, and Argentina. Now this metal found in Kashmir.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com