
இந்தியாவின் பல்வேறு இடங்களில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலநிலைக்கு ஏற்றவாறு எதாவது செல்ல வேண்டும் என்று நினைபவர்களா நீங்கள், அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது.
நவம்பர் மாதத்தில் இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நீங்கள் பனிப்பொழிவை காணலாம்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் வடக்கு உயரத்தில் இருந்து உத்தரகாண்டின் அழகிய பள்ளத்தாக்குகள் வரை நவம்பரில் இந்த இடங்கள் பனிப்பொழிவின் கண்கவர் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
நீங்கள் குளிர்கால விளையாட்டு ஆர்வலராக இருந்தால், ஸ்ரீநகரில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ள குல்மார்க் தென்கிழக்கு ஆசியாவிலேயே செல்ல சிறந்த இடமாகும். பனிப் பிரியர்கள் மற்றும் பனிச்சறுக்கு ஆர்வலர்கள் ஆகியோருக்கு இந்த இந்த இடம் மிகவும் பிடித்தமானதாக உள்ளது.
குளிர்காலத்தில், லடாக்கில் இருக்கும் ஏரிகள் முழுவதும் உறைந்து காணப்படும். வெப்பநிலை 0 ° C க்கும் கீழ் குறைந்திருக்கும். மலையேற்றம் மற்றும் பனிச்சறுக்கு ஆகியவை லடாக்கின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான செயல்பாடுகளாகும்.
குளிர் காலநிலையை விரும்பாதவர்கள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் லடாக்கிற்குச் செல்லலாம்.
இமாச்சல பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் பார்வையிட சிறந்த இடங்களில் ஒன்று இந்த குஃப்ரி. குளிர்காலத்தில், உறைபனிக்குக் கீழே வெப்பநிலை குறையும், கடுமையான பனிப்பொழிவும் இருக்கும். இது பனிச்சறுக்கு மற்றும் பிற குளிர்கால விளையாட்டுகளுக்கான பிரபலமான இடமாக அமைகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 9,200 அடி உயரத்தில் அமைந்துள்ள அவுலியில், நவம்பர் மாத பனிப்பொழிவைப் காணலாம்.
இந்த அற்புதமான காட்சிகள் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பனி மூடிய மலைகள், பசுமையான காடுகள் மற்றும் படிக தெளிவான ஆறுகள் ஆகியவற்றின் அற்புதமான காட்சிகளுக்காக இது அறியப்படுகிறது. சாகசப் பிரியர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடம் அவுலி.
இந்த சுற்றுலா தலமானது அற்புதமான இமயமலைத் தொடர்களின் அழகிய காட்சியை வழங்குகிறது.
குளிர்கால மாதங்களில் லாச்சுங் செல்கிறீர்களானால் இந்த இடத்திற்கு அடர்ந்த மூடு பனியுடன் வரவேற்கப்படுவீர்கள்.
இந்த சிறிய, அழகான மலை நகரம் பசுமையான சிகரங்கள், பளபளப்பான நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிற பிரபலமான இடங்களுடன் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.
இங்குள்ள லாச்சுங் மடாலயத்திற்குச் செல்லுங்கள். வண்ணமயமான மலர்களால் சூழப்பட்ட லாச்சுங் சீன எல்லைக்கு அருகில் உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust