பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி - அரசின் நடவடிக்கை என்ன?

வீடியோ குறித்த விவரங்கள் தேடப்பட்டபோது, இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுப்பட்டவர் பாஜக நிர்வாகியான பிரவேஷ் சுக்லா என கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் ஒரு பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி - அரசின் நடவடிக்கை என்ன?
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி - அரசின் நடவடிக்கை என்ன?ட்விட்டர்
Published on

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.

இச்செயலில் ஈடுபட்ட அந்த பாஜக நிர்வாகி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஒருவர் மீது ஒருவர் சிறுநீர் கழித்துக்கொண்டே புகைப்பிடிக்கும் காணொளி ஒன்று இணையத்தில் பரவியது. சிறுநீர் கழித்த அந்த நபர் மது போதையில் இருந்ததும், அந்த இளைஞரை பற்றி அவதூறாக பேசியதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

வீடியோ குறித்த விவரங்கள் தேடப்பட்டபோது, இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுப்பட்டவர் பாஜக நிர்வாகியான பிரவேஷ் சுக்லா என கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் ஒரு பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

பிரவேஷ் சுக்லா பாஜக எம் எல் ஏ கேதார்நாத் சுக்லாவின் மிக நெருங்கிய நண்பர் என தி வயர் தளத்தின் அறிக்கை கூறியுள்ளது. இதனை தொடர்ந்து பிரவேஷ் சுக்லா தலைமறைவானார். தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், செவ்வாய் கிழமை இரவு அவரைக் கைது செய்தனர்.

பிரவேஷ் சுக்லா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்), 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் அவமதிப்பு), மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) ஆகிய சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவின் பேரில், இவர் மீது கடுமையான NSA க்கு எதிரான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது

இச்சம்பவம் குறித்து பல எதிர்கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி - அரசின் நடவடிக்கை என்ன?
பாஜக எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் ஆபாசபடம் பார்த்தாரா? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல் நாத் இது குறித்து கூறுகையில், “ பழங்குடியினர் சமூகத்தை பற்றி இழிவாக பேசி, இப்படி ஒரு கீழ்த்தரமான கேவலமான செயலில் ஈடுபடுவோருக்கு, இந்த நாகரீக சமுதாயத்தில் இடமில்லை.

சிறுநீர் கழிக்கும் நபர் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. பழங்குடியினர் கொடுமையில் மத்தியப் பிரதேசம் ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசம் முழுவதையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது.” என்று காட்டமாக ட்வீட் செய்திருந்தார்.

மேலும் பிரவேஷ் சுக்லா பாஜக எம் எல் ஏ கேதார்நாத் சுக்லாவின் நண்பர் எனக் கூறப்பட்ட நிலையில், கேதார்நாத் சுக்லா அதனை முற்றிலுமாக மறுத்துள்ளார். “இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டவருக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இவரை உடனடியாக கைது செய்து அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று ஏ என் ஐ தளத்திடம் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே பாஜகவினர் பல மாவட்டங்களில் சிறுபான்மையினர் மீது சாதிய தாக்குதல் நடத்துவதும், அவர்களுக்கு நாட்டில் இடமில்லை என்பது போன்ற கருத்துகளைத் தெரிவித்து வருவதும் சர்ச்சைகளை கிளப்பிவரும் நிலையில், பிரவேஷ் சுக்லாவின் இந்தச் செயல் ஆணவத்தின் உச்சக்கட்டம் என பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்ரனர்.

சாதிய பாகுபாடுகளை ஒருவர் மீது விதிப்பதை கடந்து, இது சக மனிதனை சமமாக பார்க்காத மனிதாபிமானற்ற செயல் என்று தெரிவித்து வருகின்றனர்.

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி - அரசின் நடவடிக்கை என்ன?
முகமது நபிகள் குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சை கருத்து - இதுவரை நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com