பீகார் மகாபோதி கோவில்: நூற்றாண்டுகள் பழமையான இந்திய பாரம்பரிய தலத்தின் சிறப்புகள் என்ன?

இந்த போதி மரம் அமைந்திருக்கும் மகாபோதி கோவில் ஒரு கட்டடக்கலை அற்புதம். இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான சென்கற்களால் ஆன கோவில்களில் ஒன்று இது.
பீகார் மகாபோதி கோவில்: நூற்றாண்டுகள் பழமையான இந்திய பாரம்பரிய தலத்தின் சிறப்புகள் என்ன?
பீகார் மகாபோதி கோவில்: நூற்றாண்டுகள் பழமையான இந்திய பாரம்பரிய தலத்தின் சிறப்புகள் என்ன?twitter
Published on

உலகளவில் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

புத்த மதம் தோன்ற முக்கிய காரணமாக விளங்கியவர் கௌதம புத்தர். இவரது போதனைகளின் அடிப்படையில் உருவான இந்த சமயம், இந்து மதத்துடன் பெரிதும் ஒத்துப்போகிறது.

பௌத்தர் அல்லது புத்தர் என்று அழைக்கப்படும் இந்த சாது கிபி 4 ஆம் நூற்றாண்டில் இருந்து 6ஆம் நூற்றாண்டு சமயத்தில் வாழ்ந்தவர்.

இவர் இந்திய துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.

இளவரசராக பிறந்து, துறவறம் மேற்கொண்ட புத்தர், ஒரு மரத்திற்கு கீழ் அமர்ந்து தியானம் செய்த போது அவருக்கு ஞனோதயம் தோன்றியது என்று அறிவோம். அவர் அமர்ந்திருந்த மரம் எங்கிருக்கிறது? அதனை சுற்றியுள்ள கோவிலின் சிறப்பு என்ன?

பட்டத்தை துறந்த இளவரசன்

கௌதம சித்தார்த்தா என்று அழைக்கப்பட்ட இளவரசன் ஒரு முறை இரவில் தனது ஊரைச் சுற்றிப்பார்க்க புறப்படுகிறார்.

அரண்மனையில் ராஜபோகத்துடன் வாழ்ந்த இளைஞனுக்கு கஷ்டங்கள் என்றால் என்ன என்பது அந்த இரவு எடுத்துக்காட்டியது.

தன் நாட்டின் மக்கள் இவ்வளவு சங்கடங்களில் இருக்கும்போது தனக்கு அரச பட்டமும், ராஜபோக பராமரிப்பும் வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.

வாழ்க்கையின் அர்த்ததை தேடி, இளவரச பட்டத்தை துறந்துச் செல்கிறார். துறவறம் மேற்கொள்கிறார். மனிதன் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ என்ன வழி என்பதை கண்டறிய விழைகிறார்.

அப்போது ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்கையில் அவருக்கு ஞானோதயம் ஆகிறது. “ஆசையே மனிதன் நிம்மதி இழக்க காரணம். ஆகையால் ஆசையை துறந்தால் அனைத்தும் கையில் கிடைக்கும்” என்பதை உணருகிறார்.

அதனையே மக்களுக்கு போதிக்க தொடங்கினார். கௌதம புத்தர் என்ற பெயர் பெற்று, இப்படியாக தோன்றியது பௌத்த மதம்

போதி மரம்

புத்தர் அமர்ந்து தியானம் செய்து ஞானம் பெற்றதாக கூறப்படும் போதி மரம் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மகாபோதி கோவிலுக்குள் தற்போது போதி மரம் இருக்கிறது.

இந்த இடம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரமும் பெற்றது

பீகார் மகாபோதி கோவில்: நூற்றாண்டுகள் பழமையான இந்திய பாரம்பரிய தலத்தின் சிறப்புகள் என்ன?
திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் பற்றிய இந்த விஷயங்கள் தெரியுமா?

மகாபோதி கோவில்

இந்த போதி மரம் அமைந்திருக்கும் மகாபோதி கோவில் ஒரு கட்டடக்கலை அற்புதம். இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான சென்கற்களால் ஆன கோவில்களில் ஒன்று இது.

இதனை மௌரிய அரசர் அசோகர் கட்டியெழுப்பினார். பின் வரும் காலங்களில் குறிப்பிடதக்க மாற்றங்கள் செய்யப்பட்டது.

புத்த மதத்தினை தீவிரமாக பின்பற்றியவர்களில் சாம்ராட் அசோகரும் ஒருவர்.

மகாபோதி கோவில் 55 மீட்டர் அதாவது 180 அடி உயரம் கொண்டது.

பீகார் மகாபோதி கோவில்: நூற்றாண்டுகள் பழமையான இந்திய பாரம்பரிய தலத்தின் சிறப்புகள் என்ன?
மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts

கட்டமைப்பு

ஷிகாரா என்று அழைக்கப்படும் இதன் கோபுரமானது பல அடுக்குகளால் ஆனது. நுணுக்கமான வேலைபாடுகளுடன் கூடிய வளைந்த வடிவங்களை காணலாம்.

இந்த பெரிய கோபுரத்தை சுற்றி நான்கு சிறிய கோபுரங்கள் உள்ளன. இவை நான்கும் மத்தியில் உள்ள கோபுரத்தின் வடிவத்தை ஒத்து வடிக்கப்பட்டுள்ளன.

இவை குடை போன்ற குவிமாடத்துடன் கூடியதாகவும், இரண்டு அடுக்குக் கட்டமைப்பின் மூலைகளை அலங்கரிக்கின்றன. சன்னதியில் கண்ணாடியில் பொதிந்த புத்தரின் மஞ்சள் மணற்கல் சிலை உள்ளது.

அசோகரின் கல்

புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் வழித்தோன்றல் கோவிலுக்கு அருகில் உள்ளது. வஜ்ராசனம் எனப்படும், புத்தர் அமர்ந்த இடத்தை குறிக்கும் அசோகரின் கல் ஒன்றும் கோவில் வளாகத்தில் இருக்கிறது.

சுமார் 4.8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோவில் வளாகத்தில் மற்ற கோவில்களும் இருக்கின்றன. அமர்ந்து தியானம் செய்யும் வண்ணம் அமைதியான சூழ்நிலை கொண்ட இடங்களும் உள்ளன. இந்த கோவில்களை, தியான மண்டபங்களை புத்தரின் சீடர்கள் பிற்காலத்தில் எழுப்பினர்.

ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மகாபோதி மகோத்சவம் மிகவும் பிரசித்திப் பெற்றது

பீகார் மகாபோதி கோவில்: நூற்றாண்டுகள் பழமையான இந்திய பாரம்பரிய தலத்தின் சிறப்புகள் என்ன?
பாலி: 'மிக பெரிய இந்து கோவில்' 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Pura Besakihயின் வரலாறு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com