மகாராஷ்டிரா புல்தானா பேருந்து விபத்து: 25 பேர் பலி - என்ன நடந்தது?
மகாராஷ்டிரா புல்தானா பேருந்து விபத்து: 25 பேர் பலி - என்ன நடந்தது?Twitter

மகாராஷ்டிரா புல்தானா பேருந்து விபத்து: 25 பேர் பலி - என்ன நடந்தது?

சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 32 பேர் இந்த பேருந்தில் பயணித்தனர், அதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 8 பேரும் மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
Published on

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில் மூன்று குழந்தைகள் உள்பட 25 பேர் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் துறையினர் கூறுவதன் படி, பேருந்தின் சக்கரம் ஒன்று வெடித்ததில், வாகனம் தடம்புரண்டு பேருந்து டயர் வெடித்ததில் பஸ் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிராவின் யாவத்மால் பகுதியிலிருந்து பூனேவுக்கு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. புல்தானா, சம்ருத்தி மஹாமார்க் எக்ஸ்பிரஸ்வேவை அடைந்த போது பேருந்து தீப்பிடித்துள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 32 பேர் இந்த பேருந்தில் பயணித்தனர், அதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மின்ட் தளம் கூறுகிறது. மீதமுள்ள 8 பேரும் மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பயணித்தவர்களில் பெரும்பாலானோர் நாக்பூர், யாவத்மால் மற்றும் வர்தா பகுதிகளை சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிரா புல்தானா பேருந்து விபத்து: 25 பேர் பலி - என்ன நடந்தது?
பீகார் பால விபத்து: ஒரே ஆண்டில் இடிந்து விழுந்த 7 பாலங்கள்!

மீட்பு பணிகள் தீவிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்னாத் ஷிண்டே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5,00,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் ஒடிசாவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டை புறட்டிப்போட்ட நிலையில், மீண்டும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது

மகாராஷ்டிரா புல்தானா பேருந்து விபத்து: 25 பேர் பலி - என்ன நடந்தது?
ஒடிசா ரயில் விபத்து: 14 ஆண்டுக்கு பின் இதே இடத்தில் கோர ரயில் விபத்து! அன்று என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com