இந்தியாவில் இருக்கும் மில்லியனர்கள் கிராமம்- வறுமையே இல்லாத அடடே கிராமத்தின் பின்னணி என்ன?

1995 ஆம் ஆண்டில், கிராமத்தில் வசிக்கும் 182 குடும்பங்களில், 168 குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு (பிபிஎல்) கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது.
Maharastra :  hiware bazar Small Indian Village Has 60 Millionaires
Maharastra : hiware bazar Small Indian Village Has 60 MillionairesTwitter
Published on

முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கிரண் மசூம்தார் ஷா, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஃபால்குனி நாயர் போன்ற இந்திய கோடீஸ்வரர்கள் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம், அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த கிராமம், மாநிலத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்திய இந்தியர்கள்.

ஆனால் இங்கு ஒரு கிராமம் முழுக்க மில்லியனர்களாக வலம் வருகின்றனர். படித்தது சரி தான்.

இந்தியாவில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் ஒன்று அல்ல இரண்டு அல்ல, 60 மில்லியனர்கள் உள்ளனர். எப்படி உருவானது இந்த மில்லியனர்கள் கிராமம் விரிவாக படிக்கலாம்.

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிவாரே பஜார் தான் 60 மில்லியனர்களை கொண்ட கிரமமாக உள்ளது.

1989 க்கு முன்பு வரை, ஹிவாரே பஜார், இந்தியாவின் மற்ற கிராமங்களைப் போலவே இருந்தது. 1972 இல், அது வறுமை மற்றும் வறட்சியின் பிடியில் இருந்தது.

ஆனால் 1990 களில், கிராமத்தின் தலைவிதி திடீரென மாறத் தொடங்கியது. பணக்கார கிராமமாக மாறியது. கிராமத்தில் தற்போது கிட்டத்தட்ட 60 மில்லியனர்கள் உள்ளனர். அனைவரும் விவசாயிகளே!

ஏறக்குறைய 1,250 மக்கள் வசிக்கும் இந்த ஹிவாரே பஜார் கிராமம், கடின உழைப்பு மூலம் மக்கள் எப்படி தங்கள் தலைவிதியை மாற்ற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.

பரபரப்பான சந்தைகள், மாசற்ற சாலைகள், பசுமையான வயல்வெளிகள், தரமான முறையில் கட்டப்பட்ட சில வீடுகள் உள்ளன. அது மட்டுமில்லாமல் திறந்த வெளியில் மலம் கழித்தல், புகையிலை, காடுகளை அழித்தல், மேய்ச்சல், மது அருந்துதல் போன்றவற்றின் தடை காரணமாகவும் இந்த கிராமம் சிறப்பாக உள்ளது.

ஒவ்வொரு வருடமும், கிராமம் மென்மேலும் வளர்ச்சியடைந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது.

Maharastra :  hiware bazar Small Indian Village Has 60 Millionaires
5 நாட்களுக்கு நிர்வாணமாக வாழும் பெண்கள்; விநோத சடங்கை பின்பற்றும் இந்திய கிராமம் - ஏன்?

புரட்சி எங்கிருந்து ஆரம்பம்?

1989 ஆம் ஆண்டு போபத்ராவ் பவார் கிராமத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலில் கிராமத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத மதுபானக் கடைகளையும் மூட நடவடிக்கை எடுத்தார். புகைபிடித்தல்,குடிப்பழக்கம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பவார் முன்னுரிமை அளித்தார்.

இதைத் தொடர்ந்து மதுபானம் மற்றும் புகையிலை நுகர்வுக்கு தடை விதித்தார்.

அடுத்ததாக, ஒவ்வொரு ஆண்டும் மிகக் குறைந்த அளவிலான மழையைப் பெறுவதால், அதன் நீர் தேவைகளை வரிசைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, பவார் கிராமத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் திட்டத்தைத் தொடங்கினார்.

Maharastra :  hiware bazar Small Indian Village Has 60 Millionaires
Bera : மனிதர்களும் சிறுத்தைகளும் ஒன்றாக வாழும் இந்திய கிராமம்- அசரடிக்கும் தகவல்கள்

கிராம மக்கள், மாநில அரசின் நிதியுதவியுடன் பல நீர்நிலைகளை நிறுவினர். ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்படுவதையும் அவர் உறுதி செய்தார். இந்த நீர்ப்பாசனம், பல்வேறு பயிர்களை அறுவடை செய்வதற்கும் உதவியதால் கிராமம் முன்னேற்றம் கண்டது.

1990 களில் 90 கிணறுகள் இருந்த இந்த சிறிய கிராமத்தில் இப்போது சுமார் 294 தண்ணீர் கிணறுகள் உள்ளன. இதனால் கிராமத்தில் நல்ல வளர்ச்சியடைந்த விவசாயம், கிராம மக்களின் முதன்மை வருமான ஆதாரமாக மாறியது.

மேலும், கிராமம் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களைப் பயன்படுத்துவதை நிராகரித்தது. அதற்கு மாற்றாக பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியது.

கிராமத்தின் தற்போதைய நிலை

கிராம மக்கள் தற்போது கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில், ஒரு நாளைக்கு சுமார் 33 கேலன் பால் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 21 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி அதிவேகமாகப் பெருகி ஒரு நாளைக்கு சுமார் 880 கேலன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

1995 ஆம் ஆண்டில், கிராமத்தில் வசிக்கும் 182 குடும்பங்களில், 168 குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு (பிபிஎல்) கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது.

கிராமத்தின் மற்ற சாதனைகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிப்பறை உள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாயத்தில் 3 பெண்கள் உள்ளனர். கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தில் இரண்டாவது பெண் குழந்தையின் திருமணம் மற்றும் கல்விச் செலவுகளையும் கிராமமே ஏற்கிறது.

இந்த கிராமம் நாட்டிலேயே அதிக தனிநபர் வருமானம் ஈட்டும் கிராமமாக உள்ளது. இங்குள்ள கிராமவாசிகள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ. 30,000 வருமானம் ஈட்டுவதாகவும், தற்போது உள்ள 235 குடும்பங்களில் 60 பேர் கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர்.

இந்த கிராமம் மகாராஷ்டிரா அரசாங்கத்தால் 'சிறந்த கிராமம்' என்ற பட்டத்தையும் பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி கூட, கிராமத் தலைவர் மற்றும் கிராம மக்கள் செய்த சிறந்த பணிகளைப் பாராட்டினார். போபத்ராவ் பவார் மகாராஷ்டிராவின் மாதிரி கிராமத் திட்டத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Maharastra :  hiware bazar Small Indian Village Has 60 Millionaires
Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்!பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com