மம்தா பானர்ஜி: ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்
மம்தா பானர்ஜி: ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்NewsSense

சாலையோரத்தில் கான்வாயை நிறுத்தி மம்தா பேனர்ஜி செய்த காரியம்! - வைரலாகும் வீடியோ

பிர்சா முண்டா பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட மம்தா, அவரது 5 சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அங்கு வந்திருந்த இசைக்கலைஞர்களுடன் இணைந்து மேளம் வாசித்து, பாரம்பரிய நடனமாடினார்
Published on

ஜர்கிராம் என்ற இடத்தில், சாலையோர வண்டிக்கடை ஒன்றில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பக்கோடா விற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி ஜர்கிராம் என்ற இடத்திற்கு பழங்குடியினர் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள சென்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மம்தா பேனர்ஜி பிர்சா முண்டா பிறந்த நாளான நவம்பர் 15 ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்தார். மேற்கு வங்கத்தின் விடுதலைக்காக இவரது பங்களிப்புகளை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட மம்தா, அங்கு பிர்சா முண்டாவின் 5 சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அங்கு வந்திருந்த இசைக்கலைஞர்களுடன் இணைந்து மேளம் வாசித்து, பாரம்பரிய நடனமாடினார்

 மம்தா பானர்ஜி: ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்
21 கடைகள்; 1 லட்சம் பானி பூரி; மகள் பிறந்தநாளில் தந்தை வழங்கிய பரிசு; வியந்த முதல்வர்!

அதன் பிறகு வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த முதலமைச்சர் மம்தா வண்டியை நிறுத்தி, சாலையோரம் இருந்த டீக்கடைக்கு சென்றார். அங்கு அவர் பொதுமக்களுக்கு பக்கோடா விற்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மம்தா பேனர்ஜி இதற்கு முன்னரும் இவ்வாறு சாலையோர கடைகளுக்கு சென்று பானி பூரி, மோமோஸ் விற்றது இணையத்தில் வைரலானது.

 மம்தா பானர்ஜி: ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம்
சுற்றுலாப் பயணிகளுக்கு பானி பூரி தயாரித்துக் கொடுக்கும் மம்தா பானர்ஜி - எங்கே ? | video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com