இலவசமாக 1 லட்சம் பானிபூரி : மகளின் பிறந்தநாளை கொண்டாடிய தந்தை
இலவசமாக 1 லட்சம் பானிபூரி : மகளின் பிறந்தநாளை கொண்டாடிய தந்தைTwitter

21 கடைகள்; 1 லட்சம் பானி பூரி; மகள் பிறந்தநாளில் தந்தை வழங்கிய பரிசு; வியந்த முதல்வர்!

இந்த நிகழ்வு மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது ட்விட்டர் பக்கத்தில் குப்தாவை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
Published on

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி ஆன்சல் குப்தா. இவர் தன் பெண் குழந்தையின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு 1 லட்சம் பானி பூரிகளை இலவசமாக வழங்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தன் மகள் அனோகியின் பிறந்தநாளுக்காக ஆன்சல் குப்தா கடந்த புதன் கிழமை ஒரு விழாவை முன்னெடுத்திருக்கிறார். பஞ்சரி மைதானத்தில் நடந்த அந்த விழாவில், ஒரு பெரிய கூரையின் கீழ் 21 கடைகளை அமைத்திருக்கிறார். அந்த கடைகளில் வைத்து 1 லட்சம் பானி பூரிகளை இலவசமாக மக்களுக்குக் கொடுத்திருக்கிறார். இந்த பானி பூரியை "பேட்டி பச்சோ, பேட்டி பதோ" என்ற செய்தியுடன் வழங்கியிருக்கிறார் அவர்.

`பேட்டி பச்சோ, பேட்டி பதோ' என்றால் இயற்கையின் பெண்கள், அவர்களுக்கு கல்வி வழங்குங்கள் என்று அர்த்தம். தனது கொண்டாட்டத்துடன் பெண்கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார் என பலரும் குப்தாவை பாராட்டினர். "பெண்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனது நோக்கம் என்பதால் செலவு குறித்து கவலைப்படவில்லை" என்று கூறியுள்ளார் குப்தா.

இலவசமாக 1 லட்சம் பானிபூரி : மகளின் பிறந்தநாளை கொண்டாடிய தந்தை
Sacheen Littlefeather: இந்த பெண்ணிடம் 49 ஆண்டுக்குப் பின் ஆஸ்கார் மன்னிப்பு கேட்டது ஏன்?

இந்த நிகழ்வு மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது ட்விட்டர் பக்கத்தில் குப்தாவை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகள் அனோகி!

எப்போதும் மகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள், பிரகாசமான எதிர்காலத்திற்கான ஆசீர்வாதங்கள்!" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்வர் ஷர்மா அந்த விழாவில் கலந்துகொண்டார்.

இலவசமாக 1 லட்சம் பானிபூரி : மகளின் பிறந்தநாளை கொண்டாடிய தந்தை
பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி; ஹெலிகாப்டரில் அழைத்துவந்த தந்தை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com