தெருநாய் தொல்லை : துப்பாக்கி ஏந்தி மகள்களுக்கு பாதுகாப்பு அளித்த தந்தை

இதற்கிடையே, நாய்களை கொல்லுவதோ அல்லது அவைகளை துன்புறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளித்த நபர்
பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளித்த நபர்Twitter
Published on

நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் செய்திகளுக்கு மத்தியில், கேரளாவில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சிறியவர்கள், பெரியவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் யாரையும் இந்த தெரு நாய்கள் விட்டு வைப்பதில்லை.

2022-ல் இதுவரை நாய் கடியால் 21 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தெருநாய்
தெருநாய்Twitter

சாலைகளில் சுற்றி தெரியும் நாய்கள் நடந்து செல்வோர் வாகன ஓட்டிகள் என அனைவரையும் கடித்து விடுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஒட்டிகள் தெரு நாய்களால் விபத்தில் சிக்கி வருகிறார்கள்.

நாய்களின் தொல்லை அதிகரித்ததால் சில இடங்களில் அவற்றை தூக்கிலிடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இதற்கிடையே, நாய்களை கொல்லுவதோ அல்லது அவைகளை துன்புறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளித்த நபர்
ஆயிரக்கணக்கான மனிதர்களை காத்த நாய் குட்டி - ஒரு சூப்பர் ஹீரோ கதை!

இந்தநிலையில் குழந்தைகளை நாயிடமிருந்து பாதுகாத்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காசர்கோட்டில், பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு, ஒரு சிறுமியின் தந்தை சமீர் என்பவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை ஏந்தி பாதுகாப்புக்கு சென்றார். அது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது.

அதைத்தொடர்ந்து சமீரை பேக்கல் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பீதியை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளித்த நபர்
அரிய நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய் - காப்பாற்ற ஒரு ஊரே கூடிய நெகிழ்ச்சி சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com