முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட டெல்லியைச் சேர்ந்த நபர் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
30 வயதான அதர் ரஷீத், டெல்லியில் உள்ள ஒரு கிளினிக்கில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சையின்போது மருத்துவர்கள் அலட்சியம் காரணமாக அவரின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து அவர் மரணித்துள்ளார்.
குடும்பத்தார்கள் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, மரணம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிகிச்சைக்குப் பிறகு ரஷீத்தின் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டதாகவும் பின்னர் சிறுநீரகங்கள் செயலிழந்ததாகவும் அவரது தாயார் ஆசியா பேகம் தெரிவித்தார்.
ரஷீத்தின் மரணம், முடி மாற்று அறுவை சிகிச்சையின் முதல் நிகழ்வு அல்ல.
முன்னதாக செப்டம்பர் 2021 இல், 31 வயதான குஜராத்தை சேர்ந்த அனாபிலாக்டிக் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார்.
மும்பையைச் சேர்ந்த 43 வயதான தொழிலதிபர் 2019 ஆம் ஆண்டில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்.
அறுவை சிகிச்சையின்போது தரமான மயக்க மருந்துக்கு பதிலாக தரமில்லாத மயக்க மருந்தை பயன்படுத்துவது கூட நோயாளிகளின் மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம்.
ஆனால் மயக்க மருந்து செலுத்துவது என்பது சரியான நேரத்திற்கு செலுத்த வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக மருத்துவர்கள் சில நேரங்களில் துரித முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள்.
இதோடு மக்கள் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கும் மருத்துவர்கள் சரியான தரமான மருத்துவர்களாக இருக்க வேண்டும்.
குறிப்பாக விலைக் குறைந்த சிகிச்சை முறையில் இருந்து சற்று விலகி இருப்பது மிகவும் நல்லது. முடிமாற்று சிகிச்சை போன்ற அழகு தொடர்பான சிகிச்சை முறையாக இருந்தாலும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust