IPhone 15: ரூ.1.5 லட்சம் சில்லறையாக கொடுத்து ஐபோன் வாங்கிய பிச்சைக்காரர் - வைரல் வீடியோ

உள்ளே அனுமதிக்கச் சொல்லி, கடைக்காரர் கதவை திறக்க, அவர் ஐபோன் 15ஐ கையில் எடுக்கிறார். அதற்கு கட்டணமாக தான் எடுத்துவந்திருந்த ஒரு மூட்டையில் இருந்து பணம் தருகிறார். அவரிடம் இருந்தது மொத்தமும் சில்லறைகள், நாணயங்கள். கடையில் இருந்த ஊழியர்கள், காசை எண்ணுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
IPhone 15: ரூ.1.5 லட்சம் சில்லறையாக கொடுத்து ஐபோன் வாங்கிய பிச்சைக்காரர் - வைரல் வீடியோ
IPhone 15: ரூ.1.5 லட்சம் சில்லறையாக கொடுத்து ஐபோன் வாங்கிய பிச்சைக்காரர் - வைரல் வீடியோInstagram

சமீபத்தில் அறிமுகமான ஐபோன் 15ஐ சில்லறைகள் மட்டுமே கொடுத்து ஒருவர் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மொபைலை வாங்கிய நபரும், கிழிந்த ஆடை மற்றும் அழுக்கு படிந்த முகத்துடன் இருப்பது, இந்த காணொளியை இன்னும் பிரபலமடையச் செய்துள்ளது.

இதன் பின்னணி என்ன?

ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் ஐபோன் 15. இதன் விலை, ரூ.79,000. இதுவே ஐபோன் புரோ மேக்ஸ் என்றால், அதன் விலை 1,59,000 ரூபாய்.

இந்த ஐபோன் புரோ மேக்ஸ் மொபைலை ஒரு பிச்சைக்காரர் முற்றிலுமாக சில்லறைகள் கொடுத்து வாங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இது சம்பந்தமான வீடியோ வைரலானது. அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தால், அது ஒரு பிராங்க் வீடியோ என்பதை நாம் அறியலாம்.

சமூக வலைத்தளங்களில் இது போன்ற prank videos அதாவது ஒரு விஷயத்தை செய்வதாக நம்பவைத்து, அவரை ஏமாற்றுவது. இது எப்போதும், நகைச்சுவைக்காகவே செய்யப்படும் வீடியோக்கள் எனலாம்

IPhone 15: ரூ.1.5 லட்சம் சில்லறையாக கொடுத்து ஐபோன் வாங்கிய பிச்சைக்காரர் - வைரல் வீடியோ
மத்திய பிரதேசம்: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாயில் போட்டு விழுங்கிய அரசு அதிகாரி | Viral Video

எக்ஸ்பெரிமென்ட் கிங் என்ற யூடியூப் சேனல் தான் இந்த வீடியோவிற்கு பின்னணியில் இருப்பவர்கள்.

ஒரு சமூக சோதனையாக (சோசியல் எக்ஸ்பெரிமென்ட்) இதனை செய்துள்ளனர்.

ஒருவரின் உருவம், தோற்றம், அவர்களது உடையை வைத்து, எப்படிப்பட்ட மனிதர் என்பதை எடை போடும் கண்ணோட்டம், இன்றும் நம்மில் பலரிடம் உள்ளது.

ஐபோன் என்பது, நம் மக்களிடையே ஆடம்பரத்தின் அடையாளமாக உள்ளது. அதன் விலை காரணமாக பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் ஒரு பொருளாகவும் அது இருந்து வருகிறது

IPhone 15: ரூ.1.5 லட்சம் சில்லறையாக கொடுத்து ஐபோன் வாங்கிய பிச்சைக்காரர் - வைரல் வீடியோ
Deepika : நண்பனை திருமணம் செய்த "கனா காணும் காலங்கள்" நடிகை - முன்னாள் காதலன் பதிவு Viral

ஆகையால், கிழிந்த, அழுக்கு, கறை படிந்த ஆடை உடுத்திய இளைஞர் ஒருவர், முகம் உடம்பெல்லாம், அழுக்கு படிந்தபடி, ஒரு ஐபோன் விற்பனை மையத்தில் நுழைகிறார்.

உள்ளே அனுமதிக்கச் சொல்லி, கடைக்காரர் கதவை திறக்க, அவர் ஐபோன் 15ஐ கையில் எடுக்கிறார். அதற்கு கட்டணமாக தான் எடுத்துவந்திருந்த ஒரு மூட்டையில் இருந்து பணம் தருகிறார். அவரிடம் இருந்தது மொத்தமும் சில்லறைகள், நாணயங்கள். கடையில் இருந்த ஊழியர்கள், காசை எண்ணுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

காசை எண்ணி முடித்ததும், உரிமையாளர் அந்த இளைஞருக்கு போனை வழங்கி அவருடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுக்கிறார்.

மொபைலை வாங்கி சென்ற பின்னர், சிறிது நேரத்தில் வந்தவர், இது ஒரு prank video என தெரிவிக்கிறார்.

தோற்றத்தை வைத்து அவரை எடை போடாமல், அவரையும் வாடிக்கையாளராக மதித்து விற்பனை செய்த அந்த கடைக்காரரை பலரும் பாராட்டி வருகின்றனர்

IPhone 15: ரூ.1.5 லட்சம் சில்லறையாக கொடுத்து ஐபோன் வாங்கிய பிச்சைக்காரர் - வைரல் வீடியோ
Dhoni: சேப்பாக்கத்தில் களமிறங்கிய தோனி; எச்சரித்த ஸ்மார்ட் வாட்ச்- ஏன்? |Viral புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com