குரங்கு துரத்தியதில் மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

உத்தரபிரதேச மாநிலம் பரோலி பகுதியில் கடந்த ஜூலை மாதம் முதல் ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
monkey
monkeyTwitter
Published on

குரங்கு கூட்டம் துரத்தியபோது தப்ப முயன்று மொட்டை மாடியில் இருந்து இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் உத்திரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

உத்தரபிரதேச மாநிலம் பரோலியில் உள்ள துங்கா பகுதியில் முகேஷ் என்பவர் தனது வீட்டு மொட்டை மாடியில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார் .

அப்போது திடீரென்று அங்கு வந்த குரங்கு கூட்டம் அவரை தாக்கியது. இதனால் தப்பி ஓட முயன்ற அவர் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

monkey
monkeyPexels

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வன அலுவலர் சமீர் குமார் கூறுகையில்,

இந்த நபர் தற்செயலாக மொட்டை மாடியில் இருந்து விழுந்தாரா அல்லது குரங்குகளால் தாக்கப்பட்டாரா என்பதை குறித்து அறிய விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் குரங்குகளைக் கண்டால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அப்பகுதி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

monkey
உலகிலேயே சோகமான கொரில்லா இதுதான்! 32 ஆண்டுகளாக மாலில் சிறைப்பட்டிருக்கும் குரங்கு - ஏன்?

உத்தரபிரதேச மாநிலம் பரோலி பகுதியில் கடந்த ஜூலை மாதம் முதல் ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அதே சமயம் கடந்த சில மாதங்களாக குரங்கு கடியால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் திடீரென அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

monkey
ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com