ஷாப்பிங் செய்வதென்றால் அனைவருக்கும் பிடிக்கும் தான். அதிலும், இன்டர்நெட்டின் வளர்ச்சி நமக்கு ஷாப்பிங்கை இன்னும் எளிதும் ஆக்கிக் கொடுத்துள்ளது. கடைகளுக்குச் சென்று ஒரு நாளே செலவு செய்து பார்த்துப் பார்த்து நமக்கு வேண்டியவைகளை வாங்கிய காலம் போய், வீட்டிலிருந்தபடியே நாம் ஷாப்பிங் செய்யத் தொடங்கிவிட்டோம்.
ஆனால் இந்த ஆன்லைன் ஷாப்பிங் எந்தளவுக்கு எளிதோ, அந்த அளவுக்கு நம்பகத்தன்மை அற்றதாகவும் இருக்கிறது. ஃபோன் ஆர்டர் செய்தால் செங்கல், துணி துவைக்கும் சோப்பு என, ஆர்டர் செய்ததை தவிர மற்ற அனைத்தும் கிடைக்கிறது.
அப்படித்தான் தெலங்கானாவிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலங்கானாவில் அடிலாபாத் மாவட்டம் உட்னூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான Flipkart மூலம் 6,000 ரூபாய் கொடுத்து ஒரு மொபைல் ஃபோனை ஆர்டர் செய்துள்ளார். சில நாட்கள் கழித்து டெலிவரியும் கிடைத்துள்ளது. ஆனால் பார்சலை திறந்து பார்த்த நபருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
பார்சலுக்குள் இருந்தது என்னவோ மொபைலின் டப்பாதான். பெட்டிக்குள் இருந்தது ஒரு சார்ஜர், மற்றும் ஃபோனுக்கு தேவையான துணைக்கருவிகள், கூடவே ஒரு துணி துவைக்கும் சோப்பு.
ஆனால் அதில் அவர் ஆர்டர் செய்த அலைப்பேசி மட்டும் இல்லை. அந்த இடத்தில் தான் சோப்பை வைத்து அனுப்பியுள்ளனர்.
தனக்கு அலைப்பேசிக்குப் பதில் சோப்பு டெலிவர் செய்யப்பட்டது குறித்து அந்த நபர் அந்த ஆன்லைன் கம்பனியிடம் புகாரளித்துவிட்டு, இதை வீடியோவாக பதிவு செய்து இன்டர்நெட்டில் பகிர்ந்தார். இது குறித்து அவர் காவல்நிலையத்திலும் புகாரளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust